Sivakarthikeyan: புதிய லுக்கிற்கு மாறிய சிவகார்த்திகேயன்… SK 23 படமும் வித்தியாசமா இருக்குமா..?

சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு புதிய லுக்கிற்கு மாறியுள்ள சிவகார்த்திகேயனின் போட்டோ வைரலாகி வருகிறது.

Mar 13, 2024 - 17:22
0 254
Sivakarthikeyan: புதிய லுக்கிற்கு மாறிய சிவகார்த்திகேயன்… SK 23 படமும் வித்தியாசமா இருக்குமா..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அமரன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிவா தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்கே 23 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.  

சிவகார்த்திகேயன், ஏஆர் முருகதாஸ், அனிருத் என மாஸ் கூட்டணியில் உருவாகி வரும் எஸ்கே 23 ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அசுர வேகத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட ஏஆர் முருகதாஸ், இப்போது அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். ஏஆர் முருகதாஸுக்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் காத்திருப்பதால், எஸ்ஜே 23 ஷூட்டிங் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது.  

அதன்படி எஸ்கே 23 இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து போட்டோ வெளியாகியுள்ளது. அதில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் இருவருக்கும் ஏஆர் முருகதாஸ் காட்சியை விளக்குகிறார். இந்த போட்டோவில் சிவகார்த்திகேயனின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திடீரென பார்த்தால் அசப்பில் சூரி போல இருக்கும் சிவகார்த்திகேயனின் இந்த கெட்டப் படத்தில் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User