என்னது? த்ரிஷாவிற்காக திருச்சி கிழக்கை விட்டுக்கொடுத்தாரா லாரன்ஸ்? தீயாக பரவும் தகவல்..!

த்ரிஷாவிற்காக திருச்சி கிழக்கை விட்டுக் கொடுக்கத்தான், அத்தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் முடிவெடுத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தான் இன்றைய ஹாட் டாபிக். 

Jul 01, 2026 - 14:30
0 270
என்னது? த்ரிஷாவிற்காக திருச்சி கிழக்கை விட்டுக்கொடுத்தாரா லாரன்ஸ்? தீயாக பரவும் தகவல்..!

ராகவா லாரன்ஸ் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ள நிலையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தெளிவுபடுத்தியுள்ளார். விஜய்க்காக நீண்டகாலமாக உழைத்த தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருக்கும்போது, அந்த வாய்ப்பை தான் பெறுவது சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
“கட்சியை வளர்த்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்; அதுதான் தர்மம்” என்று தெரிவித்த லாரன்ஸ், திருச்சி கிழக்கில் போட்டியிட மாட்டேன் என்றே கூறியுள்ளேன் தவிர, அரசியலுக்கு வரமாட்டேன் என்று எங்கும் சொல்லவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். சரியான நேரத்தில் அரசியல் குறித்த முடிவை அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷாவிற்காகத்தான் இந்த முடிவை ராகவா லாரன்ஸ் எடுத்துள்ளார் என்றும், அதற்கு காரணமும் உண்டு என்றும் சமூக தளவாசிகள் தெரிவித்து வருகின்றனர். 

அதாவது, த்ரிஷாவை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து வரவேண்டும் என்று தவெக தலைமை விரும்புவதாகவும், அதற்கான அடித்தளமாக திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் இருக்கும் என்றும், மற்ற தொகுதிகள் குறித்து தெரியவில்லை ஆனால் திருச்சி கிழக்கில் தவெகவிற்கே வெற்றி உறுதி என்று கணிக்கப்படுவதால், த்ரிஷாவை போட்டியிட வைத்து அவரை கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறுகின்றனர். அதனால் தான், த்ரிஷாவின் முக்கியத்துவம் அறிந்து, திருச்சி கிழக்கை ராகவா லாரன்ஸ் விட்டுக் கொடுத்துள்ளார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User