'அந்தரன்' - 'சந்திரமுகி'யின் சாயல்!குமுதம் விமர்சனக் குழு...
காதல், கொலை, மர்மம், விசாரணை என விறுவிறுப்பாக நகரும் 'அந்தரன்' திரைப்படம், சுவாரஸ்யமான திரைக்கதையால் ஈர்க்கிறது. ஆனால், க்ளைமாக்ஸ் மற்றும் லாஜிக் குறைகள் படத்தின் தாக்கத்தை ஓரளவு குறைக்கின்றன.
அழகான காதல். அத்துடன் மாடர், மிஸ்டரி, இன்வெஸ்டிகேஷன்.... இறுதியில் சமூகத்திற்குச் சின்னதாக ஒரு மெசேஜ்... த்ரில்லிங்கான த்ரீ -இன்-ஒன் பேக்கேஜை முடிந்தவரை சுவாரஸ்யமாகத் தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் இராவணன்.
வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஓர் அழகான இளம்பெண். பள்ளி, கல்லூரிக் காலத்திலேயே பலரும் அவளைக் காதலிக்கின்றனர். அந்தக் காதலை எல்லாம் அவளது அப்பா தன் செல்வாக்கால் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுகிறார். வேலைக்குப் போகும் காலத்தில் அவள் ஆட்டோ ஓட்டும் ஒரு படித்த பண்பான இளைஞனைக் காதலிக்கிறாள். ஆனால், அவன் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறான்.
தன் அப்பாதான் அதற்குக் காரணமோ என்று அவள் நினைக்கிறாள். ஆனால், காலப்போக்கில் அவளுக்குத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைகளும் மர்மமான முறையில் இறந்துபோகின்றனர். அதைக் கண்டுபிடிக்க வரும் இளம் போலீஸ் அதிகாரிக்கும் அந்தப் பெண்ணுக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட அவர் கொலைகாரனைக் கண்டுபிடித்தாரா, அவன் எதற்காக அந்தக் கொலைகளைச் செய்தான் என்பதுதான் கதை காட்சிகள் ஆரம்பத்தில் சுமாராக இருந்தாலும், போகப்போசு விறுவிறுப்பு! ஹீரோ பிரஜின், ஹீரோயின் இவானா வருண் அற்புதமாக நடித்திருக்கின்றனர். அப்பா சாம்பசிவமும் சிறப்பு. ஒளிப்பதிவு, எடிட்டிங் ஓகே! பின்னணி இசை இதம்.
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் புதிது என்றாலும், ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொல்லப்படவில்லை. ஓர் அமானுஷ்யமான சக்தியை போலியான போட்டோ மற்றும் வீடியோவை வைத்து ஏமாற்றுவதெல்லாம் எந்த லாஜிக்கிலும் பொருந்தாது.
'அந்தரன்' - 'சந்திரமுகி'யின் சாயல்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)