நகை வாங்க திட்டமா? மீண்டும் ஏறிய தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 உயர்ந்துள்ளது.

Jul 10, 2026 - 04:56
0 241
நகை வாங்க திட்டமா? மீண்டும் ஏறிய தங்கம் விலை!

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கடந்த சில நாள்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று முதல் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ 1,120ம், செவ்வாய் அன்று சவரனுக்கு ரூ 1,280ம் குறைந்து  வந்தது. புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ 560 குறைந்திருந்த நிலையில் மாலையில் மேலும் ரூ 640 குறைந்தது. 

நேற்று (வியாழன்) காலை சவரனுக்கு ரூ 240 குறைந்த நிலையில் மாலை ரூ 800 உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,06,800க்கும் கிராம் ரூ 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,350 க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ 245க்கும் ஒரு கிலோ  ரூ 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்து வந்திருந்த தங்கத்தின் விலை இன்று ஏறியதால் மேலும் தங்கத்தின் விலை ஏறுமா? என்று எதிர்ப்பார்ப்பும் நிலவிவருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User