நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்...தொடர்ந்து சரியும் தங்கம் விலை...

தங்கம் பவுனுக்கு ரூ.240, வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து இன்று விற்பனையாகிறது. தொடர்ந்து குறையும் விலையால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Jul 09, 2026 - 04:51
0 238
நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்...தொடர்ந்து சரியும் தங்கம் விலை...

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் தொடர்ந்து நீடித்து கொண்டு வருகிறது. கடந்த 5-ஆம் தேதி வரை ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை நேற்று நிலவரப்படி கிராமுக்கு ரூ.160 ம்,பவுனுக்கு ரூ.1,280 ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13,400 க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை பொறுத்த வரை நேற்று விலை மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.250 க்கும்,ஒரு கிலோ ரூ.2லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்து அதன்படி கிராமுக்கு ரூ.30 ம் பவுனுக்கு ரூ.240 ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,220 க்கும்,ஒரு பவுன் ரூ.1,05,760 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது.கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.245 க்கும்,ஒரு கிலோ ரூ 2,40,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது நகை வாங்குவோர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User