திருப்பதியில் மே மாதம் ரூ.120.28 கோடி உண்டியல் வசூல்: 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி கோயிலில் கடந்த மே மாதத்தில் 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் ரூ.120.28 கோடியை காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர். 

Jun 01, 2026 - 10:07
Updated: 2 months ago
0 485
திருப்பதியில் மே மாதம் ரூ.120.28 கோடி உண்டியல் வசூல்: 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி மே மாதம்

மே மாதம் கோடை விடுமுறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதிலும் இருந்தும் திருப்பதிக்கு பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்திருந்தனர். கடந்த மே மாதத்தில் 25 லட்சத்து 46ஆயிரத்து168 பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். மே மாதம் கடும் வெயில் இருந்த போதிலும் திருப்பதிக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டது. 

பக்தர்கள் மே மாதத்தில் அளித்த காணிக்கை காரணமாக  ரூ.120.28 கோடி உண்டியல் வசூல் ஆகி உள்ளது. மே மாதத்தில் 12 லட்சத்து 29ஆயிரத்து 773 பக்தர்கள் முடிகாணிக்கை செய்து  நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர். 36 மணி நேரங்கள் வரை மே மாதத்தில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது. பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக விஐபி தரிசனம் சில நாட்களை ரத்து திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டு இருந்தது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User