2000 ஆண்டு பழமை வாய்ந்த் பொன்னேரி பாலீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தை சேர்ந்த திருப்பாலைவனத்தில் அமைந்துள்ள 2000 ஆண்டு பழமை வாய்ந்த் பாலீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Feb 02, 2026 - 05:06
Updated: 6 months ago
0 406
2000 ஆண்டு பழமை வாய்ந்த் பொன்னேரி பாலீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் 
பொன்னேரி பாலீஸ்வரர் கோயில் மஹா கும்பாபிஷேகம்

பொன்னேரியில் அமைந்துள்ள பாலீஸ்வரர் திருக்கோயில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த்தது. இந்தியாவில் உள்ள 108 சிவலாய திருத்தலங்களில் ஒன்று. இந்த கோயிலில் சிவலிங்கம் பாலமர வடிவில்  உள்ளது. அது மட்டுமின்றி திருக்கோயிலுக்கு எதிரே கோயில் அமைந்திருப்பது இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு.

தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்று உண்பதற்கு முன்பாக சிவபிரானைப் பூசிக்க என் பணி தாங்கள் பொற்ற அமுதத்தின் ஒரு பகுதியை லிங்கமாகப் பிடித்து வைத்து பூஜை செய்த இடமை இன்று திருப்பாலைவனம் என அழைக்கப்படுகிறது. 

இவ்வாறு தேவர்களால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுப் பின்னர் முதலாம் ராஜேந்திர சோழன் வடபுலம் சென்று திரும்புகையில் அவன் இவ்வூரில் தங்க நேர்ந்தார். சிவன் மீது பக்தி கொண்டு ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் பையூர் கோட்டத்தில், பொன்னேரி வட்டத்திலுள்ள திருப்பாலைவனத்தில் திருக்கோயில் கொண்டெழுந்தருளி அனைவருக்கும் அருள் பாலித்து வருகின்றனர். அருள்மிகு ஸ்ரீலோகாம்பிகை சமேத உடனுறை அருள்மிகு திருப்பாலீஸ்வரப் பெருமானுக்குக் மகாகும்பாபிஷோகம் நிகழ்ச்சி நடைபெற்றது. ,

கடந்த 30-ம் தேதி வெள்ளிக்கிழமை த்ரயோதசி திதி, திருவாதிரை நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்ளாக மகர லக்னத்தில் ஆலய பரிவாரமூர்த்திகள் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் ஸ்ரீலோகாம்பிகை சமேத ஸ்ரீ பாலீஸ்வரர் மற்றும் இராஜகோபுரம், விமான கோபுரங்கள் மஹாகும்பாபிஷேகமும் நடைபெற்றது. 

இந்த மஹாகும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி அருளை பெற்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User