கலப்பட நெய் மூலம் 20 கோடி திருப்பதி  லட்டு தயாரிப்பு: தரத்தை ஆய்வு செய்ய வருகிறது  'இ-நோஸ்' மற்றும் 'இ டங்'

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதி செய்ய, 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான, 'இ-நோஸ்' மற்றும் 'இ டங்' எனப்படும், 'மின்னணு மூக்கு' மற்றும் 'மின்னணு நாக்கு' என்ற அதிநவீன இயந்திரங்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

Feb 25, 2026 - 03:53
0 686
கலப்பட நெய் மூலம் 20 கோடி திருப்பதி  லட்டு தயாரிப்பு: தரத்தை ஆய்வு செய்ய வருகிறது  'இ-நோஸ்' மற்றும் 'இ டங்'
கலப்பட நெய் மூலம் 20 கோடி திருப்பதி  லட்டு தயாரிப்பு

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழு மலையான் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காக கோவில் சார்பில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ஆந்திராவில் கடந்த முறை ஆட்சியில் இருந்த ஓய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, லட்டு தயாரிப்புக்காக கலப்பட நெய்யை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.அதில், 2019 முதல் 2024 வரை ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்த பதவிக் காலத்தில், லட்டு பிரசாதம் தயாரிக்க 250 கோடி ரூபாய் அளவுக்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக தெரிய வந்தது.

இந்த ஆந்திர சட்டசபையில் நேற்றைய தினம் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு தயாரிக்க விநியோகிக்கப்பட்ட 59.71 லட்சம் கிலோ நெய்யும் கலப்படம் செய்யப்பட்டது. கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 20 கோடி லட்டுகள், இந்தக் கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. லட்டு தயாரிப்புக்காக இந்தக் கலப்பட நெய்யை வாங்க திருப்பதி தேவஸ்தானம் ரூ.234.51 கோடி செலவிட்டுள்ளது.

தெய்வ குற்றம் செய்துவிட்டனா்: புனிதமான பிரசாதத்தில் கலப்படம் செய்து, முந்தைய ஆட்சியாளா்கள் தெய்வ குற்றம் செய்துவிட்டனா். திருப்பதி பக்தா்களின் உணா்வுகளை காயப்படுத்தி விட்டனா். இந்த விவகாரத்தில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவா் சுப்பா ரெட்டியின் தனி உதவியாளா் சின்ன அப்பனா ரூ.4.5 கோடி லஞ்சம் வாங்கியுள்ளாா்.

ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் போலி சான்றிதழ்கள் சமா்ப்பிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளன. பிறகு கலப்பட நெய் விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்த கலப்பட நெய்யில் பல்வேறு வகை ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டியுள்ளார். 

இந்நிலையில் திருப்பதி லட்டு தரத்தை உறுதி செய்யும் வகையில்  வரும் மே மாதம் இந்த ஆய்வகத்தில் 3.50 கோடி ரூபாய் மதிப்பில் ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து, 'இ -நோஸ்' மற்றும் 'இ-டங்' இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு நிறுவப்பட உள்ளது குறிப்பிடதக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User