" விருப்ப மனு பத்தி கேட்காதீங்க"விற்றது 50 ஆயிரம் திரும்ப வந்தது 4700: தவெக தலைமை புலம்பல்

Feb 25, 2026 - 03:23
0 1.3
" விருப்ப மனு பத்தி கேட்காதீங்க"விற்றது 50 ஆயிரம் திரும்ப வந்தது 4700: தவெக தலைமை புலம்பல்
தவெக தலைமை புலம்பல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 50 ஆயிரம் விருப்ப மனுக்கள் வாங்கி சென்ற நிலையில், 4700 மனுக்கள் மட்டும் திரும்பி வந்து இருப்பது அக்கட்சி தலைமையை புலம்ப வைத்துள்ளது. 

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த 6-ம் தேதி தமிழக வெற்றிக் கழக சார்பில் விருப்பமனுக்கள் வழங்கப்பட்டன. ரூ 100 கட்டணமாக செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என தவெக தலைமை அறிவித்து இருந்தது. இதனால் முதல் நாளே 100 ரூபாயை செலுத்தி ஏராளமனோர் விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். முதல் கூட்டம் அலைமோதியதால் மறுநாள் ஆன்லைனில் விருப்பமனுக்களை டவுன் லோடு செய்து கொள்ளளாம் என தவெக தலைமை அறிவித்தது. 

இந்நிலையில் விருப்பமனுக்களை பூர்த்தி  20-ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் திரும்ப வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விருப்பமனுக்களை பூர்த்தி செய்து கொடுக்கும் போது ரூ 10 ஆயிரம் செலுத்த வேண்டும் என தவெக தலைமை அறிவித்து இருந்தது. ஆனால் விருப்பமனுக்களை திரும்ப செலுத்துவதில் மந்தம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து விருப்பமனுக்களை விரைந்து கொடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு தவெக தலைமை உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் விருப்பமனுக்கள் திரும்ப தர தேதி கடந்து 5 நாட்கள் ஆன நிலையில், எவ்வளவு விருப்ப மனுக்கள் பெறப்பட்டது என்பதை தவெக தலைமை அறிவிக்கவில்லை. ஏனென்றால் வெறும் 4700 மனுக்கள் மட்டுமே திரும்ப வந்துள்ளன. அதாவது தொகுதிக்கு 20 மனுக்கள் கூட வரவில்லை என்பதால், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட முடியாமல் தவெக தலைமை புலம்பி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User