கரூர் சம்பவம்: 32 குடும்பங்களுக்கு அரசு பணி ஆணை வழங்கும் முதலமைச்சர் விஜய்

கரூரில் நாளை நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்று கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 32 குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்க உள்ளார்.

Jul 09, 2026 - 04:27
Updated: 18 days ago
0 495
கரூர் சம்பவம்: 32 குடும்பங்களுக்கு அரசு பணி ஆணை வழங்கும் முதலமைச்சர் விஜய்

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தேர்தல்  பிரசாரத்திற்காக தவெக தலைவர் விஜய் கரூர் மாவட்டம் வேலுசாமிப்புரத்திற்கு சென்றிருந்தார். அதிகளவு மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 2025 அக்டோபர் மாதம் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரம் அழைத்து சந்தித்தார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ 20 லட்சம் நிதி வழங்கியிருந்தார். அப்போது, விரைவில் கரூருக்கு நேரில் வந்து சந்திப்பேன் என்றும் அவர் உறுதியளித்திருந்தார். தேர்தலின் வெற்றி பிறகு முதலமைச்சர் விஜய் வருகிற ஜுலை 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்கள் கரூருக்கு செல்வதாக திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியது.

இந்நிலையில் நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து குடும்பத்தினருக்கு அரசாணை வழங்க உள்ளார்.மேலும் இந்த நிகழ்வுக்கு எதிராக திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உச்ச நீதிமன்றத்தில் விஜய்யின் கரூர் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தனர். ஆனால் தள்ளுபடி செய்து விஜய் கரூருக்கு செல்ல எந்த தடையும் உத்தரவிட்டுள்ளது. 

நாளை தமிழக முதல்வரும் தமிழக வெற்றி கழக தலைவருமான ஜோசப் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வழி நெடுகிலும் கட்சி கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது

மேலும் கரூர் வெண்ணைமலை அருகே உள்ள அட்லஸ் கலையரங்கம் மைதானத்தில்  பத்து ஏக்கர் பரப்பளவில் 5000 பேர் அமரக்கூடிய வகையில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது நிகழ்வு நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 5000 பேருக்கும் QR கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரில் வாரிசுதாரர்கள் சிலருக்கு முதல்வர் ஜோசப் விஜய் அரசு வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்வும் தாந்தோணி மலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகளையும், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வனவாசி ஊராட்சியில் ரூபாய் 1,700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார் அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு அரசு துறையின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

இந்த இரு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகின்ற முதலமைச்சர் விஜயை வரவேற்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு குறித்து அனைவரும் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User