தவெக எம்.எல்.ஏ.க்கள் பெயர் தெரியுமா? முதலமைச்சர் விஜய்க்கு உதயகுமார் சவால்!

கரூர் சம்பவம் நடந்த போது யார் முதலில் அங்கிருந்து தப்பித்து முதலில் ஓடியது? கரூரை சுடுகாடு ஆக்கியது யார்? என்று அனைவருக்கும் தெரியும்.

Jul 13, 2026 - 12:24
0 316
தவெக எம்.எல்.ஏ.க்கள் பெயர் தெரியுமா? முதலமைச்சர் விஜய்க்கு உதயகுமார் சவால்!

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைந்து செயல்பட்டு வரும் இணைப்பு சங்கங்களின் மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டம் கடந்த 29 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று மதுரையில் தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆர்.பி.உதயகுமார், விளம்பர வெளிச்சத்தில் திமுகவின் ஆட்சி இருப்பதாக நாங்கள் நாகரிகமாக விமர்சித்தோம். ஆனால் தற்போது உள்ள முதலமைச்சர் விஜய் நான் 5 நிமிடம் கொளத்தூரில் பேசியதற்கே மு.க ஸ்டாலினை கொத்து புரோட்டா ஆக்கிவிட்டார்கள் என்கிறார்.

எவ்வளவு அநாகரிகமான பேச்சு? ஓடு..ஓடு..ஓடு என விமர்சிக்கிறார். யார் கரூரிலிருந்து முதலில் தப்பித்து ஓடியது என்று எல்லோருக்கும் தெரியும். கரூரை யார் சுடுகாடு ஆக்கினார்கள் என்பது  தெரியும்.எடப்பாடி பழனிசாமி ஒரு கருணையின் வடிவம். விஜயை சட்டசபையில் வைத்தே உரித்திருக்கலாம். ஆனால் இவரோ அவருக்கு வக்காலத்து வாங்கி அவருக்காக பேசினார்.

இப்போது அவர் நம்மை பார்த்துக் கூறுகிறார் தூர்ந்துபோன சக்தி என. அதிமுகவின் பெயரைச் சொல்லி தூர்ந்துபோன சக்தி எனக்கூற முதலமைச்சர் விஜய்க்கு தைரியம் இருக்கிறதா? சொல்லமாட்டார். ஏனெனில் அதிமுக எம்.எல்.ஏக்களைத்தானே குதிரைப் பேரம் நடத்தி தம்முள் வளைத்து கொண்டு இருக்கின்றார். இந்தக் களவாணி, திமுகவும் - அதிமுகவும் கூட்டு எனக் கூறுகிறது.

வருமான வரி கட்டவில்லை என்று முதலமைச்சர் விஜய்க்கு களவாணி பட்டம் கொடுத்துள்ளது மத்திய அரசு. எங்களிடம் உள்ள எம்எல்ஏக்களை திருடுவதற்கு நாங்கள் விஜயை களவாணி என்று கூறவேண்டும்.நேற்றுவரை எங்களிடம் பேசிக்கொண்டிருந்த எம்எல்ஏக்களை இன்று ராஜினாமா செய்ய வைத்து அடுத்த நாளே தவெகவில் இணைத்துக் கொள்கின்றனர்.

உழைப்பு,லட்சியம்,கொள்கை,மக்கள் பணி என்றால் என்ன எனக் கேட்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் தவெகவில் நிறைந்துள்ளனர். நான் இந்த தொழிற்சங்க கூட்டத்தில் சவால் விடுகிறேன். விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தைப் பார்த்து அவர்களின் பெயரை சரியாக முதலமைச்சர் விஜய் உச்சரித்து விட்டால் இந்த உதயகுமார் பொதுவாழ்க்கையிலிருந்தே விலகுகிறேன் என்று முதலமைச்சர் விஜய்க்கு சவால் விட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User