எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிறார் கர்நாடக முதல்வர்...கும்பகர்ண தூக்கத்தில் முதலமைச்சர்...

மத்திய அரசு கேட்டாலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Mar 13, 2024 - 17:22
0 212

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்தளப் பக்கத்தில், "இந்திய அரசு கேட்டாலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது என்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது. கோடைக்காலம் நெருங்கி வரும் வேளையில், தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீரை பெற திராணி அற்ற இந்த விடியா அரசின் முதல்வர் தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, தன்னுடைய கூட்டணி கட்சி முதல்வரைக் கண்டித்து, உரிய சட்ட நடவடிக்கைகளைத் துரிதமாக செயல்படுத்தி தமிழ்நாட்டிற்கான நியாயமான காவிரி நீர்ப் பங்கீட்டினைப் பெறுமாறு வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User