Vettaiyan: வேட்டையன் ரஜினியுடன் இறுதிச்சுற்று நாயகி ரித்திகா… அந்த ஒரு வார்த்தை தான் Highlite

வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் நடித்து வரும் ரித்திகா சிங் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

Mar 13, 2024 - 17:52
0 215
Vettaiyan: வேட்டையன் ரஜினியுடன் இறுதிச்சுற்று நாயகி ரித்திகா… அந்த ஒரு வார்த்தை தான் Highlite

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தை தசெ ஞானவேல் இயக்கி வருகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் ராணா நடிக்கும் போர்ஷனை முடித்துவிட்ட தசெ ஞானவேல், அடுத்து ரஜினியுடன் ரித்திகா சிங் நடிக்கும் காட்சிகளை ஷூட் செய்து வருகிறார். இதனையடுத்து வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை ஷேர் செய்துள்ளார் ரித்திகா சிங்.  

மேலும் ரஜினியுடன் நடிப்பது குறித்து நெகிழ்ச்சியாக கேப்ஷன் கொடுத்துள்ள ரித்திகா, இந்த வாய்ப்புக்காக நன்றி எனவும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக மிரட்டிய ரித்திகா சிங், வேட்டையனில் எப்படி மாஸ் காட்டப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User