காற்றோடு கலந்த கதைசொல்லி.. கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்!

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Jun 28, 2026 - 06:57
Updated: 30 days ago
0 197
காற்றோடு கலந்த கதைசொல்லி.. கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். தமிழ் திரையுலகில் யதார்த்தமான கதைகளை நகைச்சுவையோடு திரைக்கதையாக அமைப்பதில் வல்லவர் என்பதால், இவர் "திரைக்கதை மன்னன்" என்று பரவலாக அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், நேற்று (ஜூன் 27) காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து வாக்கிங் செல்லும் போது பாக்யராஜ்க்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு இருக்கிறது. அப்போது அவர் உடனடியாக ஆயிரம் விளக்கு அப்போல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் பாக்யராஜ். இவரின் மரணம் திரையுலகில் கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இவரது உடலுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, பாக்யராஜின் கலை சேவைக்காக அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மறைந்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் இறுதி ஊர்வலம் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. அவரது இல்லம் இருக்கும் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User