அனந்தன் காடு திரைப்படம்-குமுதம் விமர்சனக் குழு

அரசியல் பின்னணியுடன் நகரும் இந்த ஆக்ஷன் திரைப்படம், ஆர்யாவின் நடிப்பும் விறுவிறுப்பான காட்சிகளும் கவர்ந்தாலும், திரைக்கதையில் சில லாஜிக் குறைகள் ஏமாற்றமளிக்கின்றன.

Jul 01, 2026 - 05:30
0 292
அனந்தன் காடு திரைப்படம்-குமுதம் விமர்சனக் குழு

மாடன், பேச்சியோடு மார்க்ஸ், லெனினும் இருக்கட்டும்... தமிழன் தமிழனாக இருக்க வேண்டும், திராவிட சூழ்ச்சியிலிருந்து அவன் விடுதலை பெற வேண்டும் என்பதுதான் படத்தின் கரு. கதை கோவாவில் ஆரம்பித்து ராமநாதபுரத்தில் முடிந்தாலும் இலங்கை, திருவனந்தபுரம், ராஜஸ்தான் எனத் திரைக்கதை விரிந்து பரந்து செல்கிறது.

இலங்கைத் தமிழ்ப் போராளியாக ஆர்யா ஆக்ஷனில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் பிரமாதப்படுத்துகிறார். தன் குடும்பம் மொத்தத்தையும் சிங்கள ராணுவத்தின் வன்முறையால் இழந்த துயரங்களை மிகையில்லாமல் நமக்குள் கடத்துகிறார். கிளைமாக்ஸ் ஃபைட்டில் தெறிக்க விடுகிறார்.

நிகிலா விமல் ஒவ்வொரு காட்சியிலும் நெஞ்சைத் தொடுகிறார். அழகும் திறமையும் அவரிடம் கொட்டிக் கிடக்கிறது. ரெஜினா கசன்ட்ரா பந்தியில் ஸ்வீட் மாதிரி! இந்திரன் தலைமையிலான ரவுடி கேங் சூப்பர். ஒரு ரவுடி குரூப் இசைக் குழு நடத்துவது புதுசு. வில்லன் சுனில் காரசாரம் ஒளிப்பதிவு, எடிட் டிங் பெர்ஃபக்ட் மேட்ச். இசை பரவாயில்லை.

இலங்கை இனப் படுகொலைக்குத் தமிழக அரசியல்வாதிகளின் துரோகம்தான் முக்கியக் காரணம் என்பதை நேரடியாகச் சொல்லத் தயங்கி, கேரள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் சுயநல அரசியல் மூலம் சுற்றிவளைத்துச் சொல்கிறார் இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார். ஆனால், இலங்கை படத்தில் கைத் தமிழர் பிரச்னையும், கேரள அரசியலும் ஒட்டவே இல்லை. படம் முழுக்கக் கம்யூனிஸ்ட்களை வெச்சு செய்திருக்கிறார்! காட்சிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கொஞ்சம் ஓவர். முதல்வர் போனைக் கடத்துவது. விடுவிப்பது எல்லாம் சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User