Jyotika: “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா..” சூர்யாவுக்கே டஃப் கொடுத்த ஜோதிகா!

இந்தியில் ஜோதிகா நடித்துள்ள சைத்தான் திரைப்படம் இந்த வாரம் 8ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் சூர்யாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஜோதிகா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Mar 06, 2024 - 12:52
0 272
Jyotika: “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா..” சூர்யாவுக்கே டஃப் கொடுத்த ஜோதிகா!

குஷி திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினாக அறிமுகமான ஜோதிகா, இன்று பான் இந்தியா ஸ்டாராக மிரட்டி வருகிறார். சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, அதன்பின்னர் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகியிருந்தார். ஆனாலும் ஆடின காலும் பாடினா வாயும் சும்மா இருக்காது என்ற பழமொழிகேற்ப, மீண்டும் கேமரா முன் பெர்ஃபாமன்ஸ் செய்து வருகிறார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோருடன் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் சைத்தான். இந்தியில்  உருவாகியுள்ள சைத்தான் வரும் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனிடையே சூர்யாவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஜோதிகா ஷேர் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கஜினி, வாரணம் ஆயிரம், சிங்கம் போன்ற படங்களில் சிக்ஸ் பேக் வைத்து ஆக்‌ஷனில் மிரட்டியிருந்தார் சூர்யா. தற்போது நடித்து வரும் கங்குவா படத்திற்காகவும் மிரட்டலாக Transform ஆகியுள்ளார். இந்த நிலையில் தான் ஜோதிகாவும் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு அதகளம் செய்துள்ளார்.

ஏற்கனவே தனது ஜிம் ஒர்க் அவுட் வீடியோக்களை ஷேர் செய்து வந்த ஜோதிகா, இப்போது சந்திரமுகி மோடில் இன்னும் உக்கிரமாக உடற் பயிற்சி செய்துள்ளார். ஜோதிகாவின் ஒர்க் அவுட் வீடியோ பார்த்த ரசிகர்கள், “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா… இவங்க லேடி துரை சிங்கம்..” என்றெல்லாம் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆனால், ஜோதிகாவோ “ஃபிட்னஸ் என்பது எடை குறைப்பது மட்டும் கிடையாது… வாழ்நாள் அதிகரிக்கும்..” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User