நீங்கள் நலமா? திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்... பொதுமக்களுடன் போனில் உரையாடல்...

'நீங்கள் நலமா' திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் போனில் உரையாடினார். 

Mar 06, 2024 - 12:39
0 171
நீங்கள் நலமா? திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்... பொதுமக்களுடன் போனில் உரையாடல்...

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக திமுக அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்துதுறைச் செயலாளர்கள் ஆகியோர், தொலைபேசி மூலம் மக்களை தொடர்பு கொண்டு, அரசின் திட்டங்கள் கிடைக்கப் பெற்றதா? என்பது குறித்து கேட்டறிவார்கள் என தெரிவிக்கப்பட்டது. 

அந்த வகையில் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக 'நீங்கள் நலமா' திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களிடம் தொலைபேசி வாயிலாக உரையாடினார். பெண் ஒருவரிடம் பேசிய அவர், அரசின் திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் "உங்கள் நலனை காக்கவே நான் உழைக்கின்றேன் எனவும், அதன் மற்றுமோர் அடையாளம் தான் நீங்கள் நலமா திட்டம்" எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User