மார்ச்.8 தமிழ்நாடு வரும் குடியரசு துணைத்தலைவர்.. பயண விவரம் இதோ...
ஒரு நாள் பயணமாக மார்ச்-8ம் தேதி பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களுக்கு குடியரசு துணைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மார்ச் 8ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு செல்லும் குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தன்கர், இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை பார்வையிடுகிறார். அங்கிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் அவர், ராஜநாக விருது வழங்கும் விழாவில் பங்கேற்று, விருதுகளை வழங்கவுள்ளார்.
பின்னர் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு செல்லும் குடியரசுத் துணைத் தலைவர் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)