கடல்வழி முற்றுகையைத் திரும்பப் பெற்ற அமெரிக்கா.. ஹோர்முஸை கடந்த எண்ணெய் கப்பல்கள்!

அமெரிக்க ராணுவம் 18 தேதி அன்று  ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக சென்ற கடல்வழி முற்றுகையைத் திரும்பப் பெற்றுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.

Jun 19, 2026 - 04:42
0 212
கடல்வழி முற்றுகையைத் திரும்பப் பெற்ற அமெரிக்கா.. ஹோர்முஸை கடந்த எண்ணெய் கப்பல்கள்!
us iran ceasefire 125 million barrels oil tankers export

அமெரிக்க மற்றும் ஈரான் இடையிலான போர் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் ஒப்பந்தம் 17 ஆம் தேதி  கையெழுத்தானது.உலகெங்கிலும் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கையெழுத்து ஒப்பந்தமாகியுள்ளது.

மேலும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட செய்தி என்னவென்றால் ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான அனைத்து கடற்படை முற்றுகையையும் திரும்பப் பெற்று விட்டதாக அமெரிக்க மத்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்  அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வழிகாட்டுதலோடு ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் நுழையும் அனைத்து கடல் போக்குவரத்து மீதான தடையை தகர்த்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஈரான் துறைமுகங்களிலிருந்து வெளிவரக் கூடிய கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுக்காது எனவும் அமெரிக்க முற்றுகை அனைத்தும் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் கடைப்பிடிக்கப்படும் மற்றும் முழுமையாக இதனை  உறுதி செய்ய எங்களின் கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க முற்றுகை திரும்பப் பெறப்பட்டதையும் சரக்குக் கப்பல்கள் பயணத்தை தொடங்கி இருப்பதையும் நேற்று மட்டும் 1.25 கோடி பீப்பாய் எண்ணெய் கப்பல்கள் மூலம் சென்றதையும் குறிப்பிட்டு பேசினார்.

இது குறித்து ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் 18 ஆம் அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது பாரசீக வளைகுடா நீரிணை வழியாகச் செல்ல விரும்பும் கப்பல்களுக்கு விரைவான அனுமதி வழங்க அந்நாட்டின் நீரிணை நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்றும் போர் நடந்த போது பாதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User