சைக்காலாஜிக்கல் த்ரில்லர் கதையில் வரலட்சுமி சரத்குமார்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

Apr 22, 2024 - 21:20
0 276
சைக்காலாஜிக்கல் த்ரில்லர் கதையில் வரலட்சுமி சரத்குமார்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள சபரி திரைப்படம் மே 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் சிம்புவின் போடா போடி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தாரை தப்பட்டை, சண்டைக் கோழி 2, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். சமீபத்தில் இவருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள சபரி திரைப்படம் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மகேந்திர நாத் கொண்ட்லா தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் சபரி திரைப்படம் வெளியாக உள்ளது. கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி, 'விவா' ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

த்ரில்லிங் மற்றும் எமோஷ்னல் தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆக்சன் காட்சிகளில் அதிரடியாக நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் சபரி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தனது அசாத்திய நடிப்பால் வரலட்சுமி சரத்குமார் வழக்கம் போல் ரசிகர்களை மீண்டும் தன் பக்கம் இழுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User