செங்குன்றத்தில் மர்மகாய்ச்சல்...  7 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்..

சென்னை அடுத்த செங்குன்றத்தில் மர்ம காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Apr 22, 2024 - 19:15
0 244
செங்குன்றத்தில் மர்மகாய்ச்சல்...  7 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்..

செங்குன்றம் அடுத்த பெரியார் நகரில் வசிப்பவர்கள் சங்கர் - கோவிந்தம்மாள் தம்பதி. இவர்களின் மகன் சிவா கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். தம்பதி சாதாரண காய்ச்சல் என நினைத்து அருகில் இருக்கக்கூடிய மருந்தகத்தில் மாத்திரை வாங்கி கொடுத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் காய்ச்சல் அதிகமாகி சிவா அவதிபட்டதால் பாடியநல்லூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மர்மகாய்ச்சலால் சிறுவன் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். மகனை இழந்த பெற்றோர் அவரது உடலை கட்டியனைத்து கதறி அழுதனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

சிறுவன் மரணம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏழு வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் செங்குன்றம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User