செந்தில்பாலாஜிக்கு பதவி வழங்கி சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டது திமுக - கடம்பூர் ராஜு 

சட்டமன்றத்தில் உதயநிதி நுழையும்போது திமுகவின் மூத்த அமைச்சர்களே உதயநிதிக்கு எழுந்து நிற்கும் அவல நிலை உள்ளது.

Oct 01, 2024 - 21:25
0 314
செந்தில்பாலாஜிக்கு பதவி வழங்கி சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டது திமுக - கடம்பூர் ராஜு 

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட  அதிமுக சார்பில் கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை கூட்டம் பேரையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆலோசனை வழங்கினார்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு,  "ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக அமர்வதற்கு  முன்னால். அந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்தார். இதனால் எடப்பாடி பழனிசாமி மனவேதனையில் இருந்தார். ஆர்.பி. உதயகுமார் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக எடப்பாடி அருகில் அமர்ந்த பிறகு தான் ராஜாவைப் போல கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், இன்றைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமைச்சராகவும், உதயநிதியை துணை முதலமைச்சராகவும் தேர்வு செய்து  சொந்த காசில் சூனியம் வைத்துள்ளார்.

இன்றைக்கு புள்ளி வைத்துள்ளனர். அது கோலமாகி விரைவில் அலங்கோலமாக மாறிவிடும். சட்டமன்றத்தில் அமைச்சர்கள் நுழையும்பொழுது சக அமைச்சர்கள் வணக்கம் தெரிவிப்பார்கள். ஆனால் தற்பொழுது சட்டமன்றத்தில் உதயநிதி நுழையும்போது திமுகவின் மூத்த அமைச்சர்களே உதயநிதிக்கு எழுந்து நிற்கும் அவல நிலை உள்ளது. ஆனால் துரைமுருகன் வேறு வழியில்லாமல் முகத்தை திருப்பி கொண்டு விடுவார்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User