ஆஜராகாத செந்தில் பாலாஜி... போலீசுக்கு எழுதிய கடிதத்தில் என்ன சொன்னார்?

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Jul 14, 2026 - 11:30
0 191
ஆஜராகாத செந்தில் பாலாஜி... போலீசுக்கு எழுதிய கடிதத்தில் என்ன சொன்னார்?

தவெகவின் ஆட்சியை கவிழ்க்க கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் தவெக எம்எல்ஏவான இளயராஜாவிடம் ரூ 35 கோடி தருவதாக பேரம் பேசியது தொடர்பாக சென்னை  சேர்ந்த திருநாவுக்கரசு உட்பட 9 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் பின்னணியில் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  அவரது தம்பி அசோக்குமாரும் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ஆஜராக வேண்டும் என்று போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய போதும் அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை.

அதனைத் தொடர்ந்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றனர். விசாரனையின் போது அதிகாரி முன் காலை மாலை என இரு வேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் இருவரும் நீதிமன்ற உத்தரவை மீறி ஐந்து நாட்கள் ஆகியும் விசாரணைக்கு அதிகாரி முன் ஆஜராகவில்லை. இதற்கிடையில் இருவரும் ஒழிந்து கொண்டார்கள் போல என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் செந்தில் பாலாஜியிடமிருந்து தற்போது  திருவல்லிக்கேணி காவல்துறையினருக்கு கடிதம்  வந்துள்ளது.

அதில் கூறியிருப்பது  வழக்கில் தமது பெயர் மற்றும் தனது சகோதரர் அசோக்குமார் பெயர் இடம்பெறவில்லை.வழக்கில் எங்களின் பெயர்  இல்லாத போது நாங்கள் எப்படி ஆஜராக முடியும்.தனக்கு 35(3)  BNSS என்ற பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்க வேண்டும்.

மேலும் நான் இந்த வழக்கின் கீழ் ஆஜராகும் பட்சத்தில் வேறு எந்த வழக்கிலும் என்னை கைது செய்யக் கூடாது என்றும் தான் ஒரு மக்கள் பிரதிநிதி அது மட்டுமல்ல நான் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர். அதனால் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நான் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட  மற்றும ஆஜராக வேண்டும் என்றால் எனக்கு காவல் நிலையத்தில் மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும்.

கரூரில் 41 உயிரிழப்பு தொடர்பாக ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் மிரட்டும் தோனியிலும் தன்னுடைய ஆதரவாளர்களை கைது செய்து வருவதாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து திருவல்லிக்கேணி போலீசார் 35 (3)  BNSS நோட்டீஸ் கொடுக்கலாம் அல்லது  நீதிமன்ற நிபந்தனையை மதிக்காமல் இருப்பதால் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாரின் முன் ஜாமினை ரத்து செய்ய நீதி மன்றத்தை நாடலாம் என்று போலீசார் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User