Thug Life: மீண்டும் ஜெயம் ரவி, துல்கர் சல்மான்… சீனில் வந்த சிம்பு… தக் லைஃப் லேட்டஸ்ட் அப்டேட்!

மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் இருவரும் இந்தப் படத்திற்காக மீண்டும் கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Apr 16, 2024 - 11:30
0 310
Thug Life: மீண்டும் ஜெயம் ரவி, துல்கர் சல்மான்… சீனில் வந்த சிம்பு… தக் லைஃப் லேட்டஸ்ட் அப்டேட்!

சென்னை: நாயகனுக்குப் பின்னர் கமல்ஹாசன் – இயக்குநர் மணிரத்னம் கூட்டணி தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. கடந்தாண்டு கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக தக் லைஃப் டைட்டில் டீசர் வெளியாகியிருந்தது. மேலும், கமலுடன் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, நாசர் ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.  

சென்னையில் தொடங்கிய தக் லைஃப் ஷூட்டிங் அடுத்து ரஷ்யாவில் தொடரும் என சொல்லப்படுகிறது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கமல் பிஸியாக இருப்பதால், அவர் இன்னும் படப்பிடிப்புக்குச் செல்லவில்லை. இதனால் ஷூட்டிங் தேதி மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான் இருவரும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தக் லைஃப் படத்தில் இருந்து விலகிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.  

அவர்களுக்குப் பதிலாக சிம்பு, அரவிந்த் சாமி, நிவின் பாலி அல்லது வேறு முன்னணி நடிகர்கள் யாராவது நடிக்கலாம் என எதிர்பார்க்கபட்டது. இதனிடையே சூர்யாவுடன் துல்கர் சல்மான் நடிக்கவிருந்த ‘புறநானூறு’ திரைப்படம் ட்ராப் ஆனது. அதேபோல் ஜெயம் ரவி கமிட்டாகியுள்ள படங்களின் படப்பிடிப்பும் புதிய ஷெட்யூலுக்கு மாறின. எனவே ஜெயம் ரவி, துல்கர் சல்மான் இருவரும் மீண்டும் தக் லைஃப் படத்திற்காக தங்களது கால்ஷீட் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இன்னொரு முக்கியமான அப்டேட்டாக, இப்படத்தில் சிம்புவும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார் சிம்பு. அதனைத் தொடர்ந்து தற்போது கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் நடிக்கவுள்ளாராம். சிம்புவிற்கு ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்துவிட்ட மணிரத்னம், அவரை இரண்டு கேரக்டர்களில் நடிக்க வைக்க பிளான் செய்துள்ளாராம். இதுபற்றிய அபிஸியல் அப்டேட்ஸ் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தக் லைஃப் அடுத்தக்கட்ட ஷூட்டிங் வரும் 20ம் தேதி முதல் டெல்லியில் தொடங்கும் எனவும், அதனைத் தொடர்ந்து செனை உட்பட பல பகுதிகளில் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. மொத்தமே இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். தக் லைஃப் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User