SuryaKiran: பிரபல இயக்குநரும் நடிகருமான சூரிய கிரண் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குநராகவும் வலம் வந்தவர் சூரிய கிரண். இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமான சுஜிதாவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mar 11, 2024 - 14:10
Updated: 2 years ago
0 356
SuryaKiran: பிரபல இயக்குநரும் நடிகருமான சூரிய கிரண் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம்!

பாக்யராஜ் இயக்கி, நடித்த மௌனகீதங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மாஸ்டர் சுரேஷ். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘டாடி... டாடி ஓ மை டாடி’ பாடல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் சுரேஷ், பின்னர் சூரியகிரண் என்ற பெயரில் பிரபலமானார். ரஜினியுடன் மனிதன், வேலைக்காரன், கமலுடன் கடல் மீன்கள், தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் என பலருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் சூரியகிரண்.   

தெலுங்கில் சத்யம், ராஜூ பாய் உட்பட 6 படங்களை இயக்கியுள்ள அவர், 2020 தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது வரலட்சுமி லீடிங் ரோலில் நடித்து வரும் அரசி என்ற படத்தை இயக்கி வந்தார். விரைவி்ல அந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று சென்னையில் உயிரிழந்தார். மஞ்சள் காமாலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சூரியகிரண். கேகே நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 49. பாண்டியன் ஸ்டார் சீரியல் மூலம் பிரபலமான சுஜிதா சூரியகிரணின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.  

காசி, சமுத்திரம், புன்னகைப்பூவே படங்களில் நடித்த காவேரியை திருமணம் செய்து, பின்னர் அவரை சட்டபூர்வமாக பிரிந்தவர் சூரியகிரண். இந்நிலையில் சூரியகிரணின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User