Rajini: பத்ரிநாத்தில் பக்தி பரவசத்தில் ரஜினி... கூட யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!

பத்ரிநாத் சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகைப்படங்கள் இணையத்தில் வைராலகி வருகின்றன.

May 31, 2024 - 15:31
0 382
Rajini: பத்ரிநாத்தில் பக்தி பரவசத்தில் ரஜினி... கூட யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க!

பத்ரிநாத்: வேட்டையன் படத்தை முடித்துவிட்டு துபாய் டூர் சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அங்கு அவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கோல்டன் விசா கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் அபுதாபியில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்ட ரஜினி, இருதினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். இதனால் விரைவில் கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துபாயில் இருந்து வந்த வேகத்தில் இமயமலை புறப்பட்டார் ரஜினிகாந்த். ஆண்டுதோறும் இமயமலை செல்வது ரஜினியின் வழக்கம். ஆனால், கொரோனா காரணமாக பிரேக் விட்டிருந்த சூப்பர் ஸ்டார், ஜெயிலர் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் இமயமலை பயணத்தை தொடங்கினார். 

பத்ரிநாத்தில் நண்பர்களுடன் ரஜினிகாந்த்
அதன் தொடர்ச்சியாக தனது அடுத்த பயணத்தை பத்ரிநாத்தில் இருந்து தொடங்கியுள்ளார் சூப்பர் ஸ்டார். இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து பத்ரிநாத் கிளம்பிய ரஜினியிடம், தேர்தல் முடிவுகள் பற்றி கேட்கப்பட்டது. ஆனால், அதுபற்றி வாயே திறக்காமல் சைலண்டாக எஸ்கேப் ஆகிவிட்டார். அதேபோல், ஆன்மிக அரசியல் குறித்து எழுந்த கேள்விக்கும் சிரித்தபடி நழுவிய ரஜினிகாந்த், தற்போது பத்ரிநாத்தில் பக்திபரவசத்துடன் வலம் வருகிறார். வெள்ளை நிற உடையில் ரஜினி சாந்தமான மனநிலையில் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் ரஜினியுடன் அவரது நண்பர்களும் உள்ளனர்.  

விரைவில் கூலி ஷூட்டிங்
இளமை கால நண்பர்கள், சினிமா வட்டார நண்பர்கள் போல், ரஜினி இமயமலை செல்லும் போதெல்லாம் அவருடன் சில ஆன்மீக நண்பர்கள் பயணம் செய்வது வழக்கம். அப்படியாக இந்த முறையும் தனது ஆன்மீக நண்பர்களுடன் பத்ரிநாத்தில் ரஜினி முகாமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மேலும் பல இடங்களுக்கு ரஜினிகாந்த் செல்லவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் சென்னை திரும்பும் ரஜினிகாந்த், கூலி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்கவுள்ளார். 

ரஜினியுடன் சத்யராஜ் கூட்டணி
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ் கமிட்டாகியுள்ளது உறுதியாகிவிட்டது. ரஜினி, சத்யராஜ் தவிர கூலி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய விவரங்கள் படப்பிடிப்பு தொடங்கும் போது அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்ஷன் ஜானரில் உருவாகவுள்ள கூலி, கமலின் விக்ரம் திரைப்படம் போல இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User