Indian 2: இந்தியன் 2 ஆடியோ லான்ச்... கமல்ஹாசனை தேடிச் சென்ற பிரபலங்கள்!

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது.

May 31, 2024 - 16:27
0 391
Indian 2: இந்தியன் 2 ஆடியோ லான்ச்... கமல்ஹாசனை தேடிச் சென்ற பிரபலங்கள்!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 ஜூலை 12ம் தேதி ரிலீஸாகிறது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இதற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கமல் நடிப்பில் கடைசியாக ரிலீஸான விக்ரம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதுமட்டும் இல்லாமல் 2கே கிட்ஸ் ரசிகர்களிடம் கமலுக்கு செம்ம கிரேஸ் கிடைத்தது. இதனால் பாதி படப்பிடிப்புடன் ட்ராப் ஆகியிருந்த இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்கினார் கமல்ஹாசன். முன்னதாக பட்ஜெட் பிரச்சினை, கிரேன் விபத்து போன்ற காரணங்களால் இந்தியன் 2 மொத்தமாக முடங்கியிருந்தது.

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா
ஆனால், விக்ரம் படத்தின் வெற்றி கொடுத்த நம்பிக்கையால், இந்தியன் 2 பட்ஜெட் பிரச்சினைக்கு ரெட் ஜெயன்ட் முற்றுப்புள்ளி வைத்தது. அதாவது இந்தியன் 2 படத்தை லைகாவுடன் இணைந்து ரெட் ஜெயன்ட் நிறுவனமும் தயாரித்தது. இந்தியன் 2ம் பாகமே வருமா வராதா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது இந்தியன் 3ம் பாகமும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியன் 2 ஆடியோ லான்ச் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா நாளை (ஜூன் 1) சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது. 

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா அழைப்பிதழுடன் கமல்
இந்தியன் 2 இசை வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. ஆனால், எந்த லொக்கேஷனில் நடைபெறும் என நேற்று மாலை தான் படக்குழு அறிவித்தது. அதேபோல் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவின் அழைப்பிதழையும் படக்குழு வெளியிட்டது. இந்தியன் தாத்தாவின் அடையாளமான பெல்ட் உள்ளே, கத்தி போன்ற வடிவில் ஆடியோ லான்ச் அழைப்பிதழ் இருப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழுடன் கமல்ஹாசன் இருக்கும் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியன் ரீ-ரிலீஸ்
லைகா சுபாஸ்கரன், ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி இருவரும் கமலுக்கு அழைப்பிதழ் கொடுக்க, அதனை கமல்ஹாசன் பெற்றுக்கொள்கிறார். மேலும், கத்தி போல இருக்கும் இந்தியன் 2 ஆடியோ லான்ச் அழைப்பிதழை கமல் கையில் வைத்திருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே இந்தியன் 2 படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக, 1996ல் வெளியான இந்தியன் ஜூன் மாதம் ரீ-ரிலீஸாகவுள்ளது. கமல், ஷங்கர், ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் வெளியாகி சக்கைப் போடு போட்ட இந்தியன் படத்தை, இப்போதைய 2கே கிட்ஸ் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதனால் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இந்தியன் படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறது படக்குழு. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User