Suriya 44: அந்தமானில் சூர்யா 44 ஷூட்டிங்... புறப்படும் முன் சூர்யா செய்த சம்பவம்!

May 31, 2024 - 17:52
0 281
Suriya 44: அந்தமானில் சூர்யா 44 ஷூட்டிங்... புறப்படும் முன் சூர்யா செய்த சம்பவம்!

சென்னை: சூர்யா நடித்து வந்த கங்குவா படத்தின் ஷூட்டிங் சில வாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் முடிந்ததும், ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனது 44வது படத்திற்காக ரெடியாகிவிட்டார் சூர்யா. அதன்படி சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். விஜய்யின் தளபதி 69 இயக்குநர் லிஸ்ட்டில் கார்த்திக் சுப்புராஜ்ஜின் பெயர் தான் டாப்பில் இருந்தது. ஆனால் அவரோ சைலண்டாக சூர்யாவுடன் கூட்டணி அமைத்துவிட்டார்.

அந்தமானில் சூர்யா 44 ஷூட்டிங்
சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் என மிரட்டலான கூட்டணியில் உருவாகவுள்ளது சூர்யா 44. இவர்களுடன் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், வில்லன் கேரக்டரில் உறியடி விஜயகுமார் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சூர்யா 44 ஷூட்டிங் அந்தமானில் தொடங்குவதாக கார்த்திக் சுப்புராஜ் ட்வீட் செய்திருந்தார். அந்தமானில் உள்ள ஹார்பரில் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிட்டதாக மினி ப்ரோமோ வீடியோவையும் ஷேர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தமான் புறப்பட்ட சூர்யா 
அதன்படி, சூர்யா 44 ஷூட்டிங் ஜூன் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதில் சூர்யா கலந்துகொள்வதும் உறுதியாகியுள்ளது. இதற்காக அந்தமான் புறப்பட்ட சூர்யா, அதற்கு முன்பாக கோயிலில் சென்று வழிபாடு செய்துள்ளார். வேஷ்டி, சட்டையில் சூர்யா கோயிலில் சாமி கும்பிட்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள், சூர்யா 44 டைட்டில் என்னவென்று கமெண்ட்ஸில் கேட்டு வருகின்றனர். சூர்யா லைன்-அப்பில் அடுத்தடுத்து படங்கள் இருப்பதால், சூர்யா 44 படப்பிடிப்பை அசுர வேகத்தில் நடத்த கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளாராம்.

லோகேஷ் கூட்டணியில் சூர்யா
இதனிடையே லோகேஷ் கூட்டணியில் சூர்யா மீண்டும் இணைந்துள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. கமல் – லோகேஷ் காம்போவில் வெளியான விக்ரம் படத்தில், ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் நடித்திருந்தார் சூர்யா. இந்த கேமியோ ரோல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் ரோலக்ஸ் என்ற டைட்டிலில் தனியாகவே ஒரு படம் இயக்கவுள்ளார் லோகேஷ். இந்தப் படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அதேநேரம் லோகேஷ் கதை, திரைக்கதை எழுதியுள்ள பென்ஸ் என்ற படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார், இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்தும் விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User