Balakrishna: “நானும் பாலய்யாவும் பிரண்ட்ஸ்..” யூடர்ன் அடித்த அஞ்சலி... அட பாவத்த!

நடிகை அஞ்சலியை டோலிவுட் சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா தள்ளிவிட்டது சர்ச்சையானது. இதனையடுத்து பாலகிருஷ்ணா குறித்து அஞ்சலி ட்வீட் செய்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

May 31, 2024 - 13:20
0 312
Balakrishna: “நானும் பாலய்யாவும் பிரண்ட்ஸ்..” யூடர்ன் அடித்த அஞ்சலி... அட பாவத்த!

ஐதராபாத்: அங்காடித் தெரு, கற்றது தமிழ் படங்கள் மூலம் பிரபலமான அஞ்சலி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிஸியாகிவிட்டார். தற்போது ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கில் கேங் ஆஃப் கோதாவரி என்ற படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ ரீலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சியில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பாலய்யாவுடன் நடிகைகள் அஞ்சலி, நேஹா ஷெட்டி இருவரும் மேடையேறினர்.   

கேங்ஸ் ஆஃப் கோதாவரி ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்
அப்போது அஞ்சலியை பாலகிருஷ்ணா லேசாக தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேடையில் ஏறியதும் அஞ்சலியை கொஞ்சம் தள்ளி நிற்க சொல்கிறார் பாலய்யா. ஆனால் அதனை அஞ்சலி கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் சூடான பாலய்யா, அஞ்சலியை தள்ளிவிட... அவரோ நிலைதடுமாறி கீழே விழ பார்த்தார். பின்னர் சுதாரித்துக்கொண்ட அஞ்சலி கீழே விழவில்லை என்றாலும், பாலய்யாவின் முரட்டு சம்பவத்துக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் மேடையில் சிரித்துக்கொண்டே சமாளித்துவிட்டார், அவருடன் நேஹா ஷெட்டியும் சிரித்த வீடியோ வைரலானது. 

அஞ்சலியை தள்ளிவிட்ட பாலய்யா
பாலய்யாவின் இந்த செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டும் இல்லாமல் பொது இடத்தில் வைத்து ஒரு நடிகையை இப்படியா தள்ளிவிடுவது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. அதேநேரம், பாலகிருஷ்ணா மாஸ் ஹீரோ என்பதால், வேறு வழியே இல்லாமல் அஞ்சலி மேடையில் சிரித்தபடி சமாளித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார் அஞ்சலி. அதில், கேங்ஸ் ஆஃப் கோதாவரி ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலகிருஷ்ணாவுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

பாலய்யாவும் நானும் பிரண்ட்ஸ்
மேலும், பாலய்யாவும் நானும் பரஸ்பர மரியாதையுடன் நட்பாக பழகி வருகிறோம். நாங்கள் நீண்டகால நண்பர்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை அவருடன் மேடையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என பதிவிட்டுள்ள அஞ்சலி, அந்நிகழ்ச்சியின் வீடியோவையும் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். நெட்டிசன்களோ அஞ்சலிக்கு சப்போர்ட் செய்து பாலகிருஷ்ணாவுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனால், அவரோ யூடர்ன் அடித்து பாலய்யாவும் நானும் பிரண்ட்ஸ் எனக் கூறி பஞ்சாயத்துக்கு முடிவு கட்டிவிட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் அஞ்சலி மீது அதிருப்தியில் உள்ளனர்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User