நல்ல முடிவு எடுங்கள்.. தாமரை மலர்ந்தால், விருதுநகரும் மலரும்... ராதிகா சரத்குமார் நம்பிக்கை

தாமரை மலர்ந்தால் இந்த விருதுநகரும் மலரும் என்று விருதுநகரில் நடந்த பரப்புரையில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேசியுள்ளார்.

Apr 10, 2024 - 14:27
0 217
நல்ல முடிவு எடுங்கள்.. தாமரை மலர்ந்தால், விருதுநகரும் மலரும்... ராதிகா சரத்குமார் நம்பிக்கை

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று விருதுநகரில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராதிகா சரத்குமார், விருதுநகர் பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடாக உள்ளதாக குற்றம் சாட்டினார். சுகாதார சீர்கேட்டால்  குழந்தைகள் பெற்றோர்கள் உடல்நிலை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைத்தால் அனைத்தும் சரிசெய்யப்படும் என்று உறுதிமொழி அளித்தார். 

தாமரை மலர்ந்தால் இந்த விருதுநகரும் மலரும் என்று கூறிய ராதிகா,  தமிழ் நாட்டை இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சி செய்து அழித்துவிட்டார்கள். ஆகவே என்னை தங்கையாக, தோழியாக, சித்தியாக நினைத்து எனக்கு ஒரு முறை வாய்ப்பளித்து, தாமரை சின்னத்தில் வாக்களித்து, விருதுநகர் மக்களவைஉறுப்பினராக தேர்ந்தெடுத்து, ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று வாக்கு சேகரித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய சரத்குமார், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன இந்த நாட்டில் ஆட்சி செய்த இரு திராவிட கட்சிகளும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்துதரவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் பொதுமக்களாகிய நாம்தான் முதலில் மாற வேண்டும். கடைசி நேரத்தில் பொதுமக்களுக்கு பணம் கொடுத்தால் நமக்கு வாக்களித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை நாம் தான் தகர்க்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், நாளைய நம் சந்திதியினர் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நாம் முதலில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஒட்டு விற்பனைக்கு அல்ல என்பதை திராவிட கட்சிகள் உணர்ந்தால் நம் நாட்டிற்கு நல்லது நடக்கும். அந்த காலம் நமக்கு வந்து கொண்டிருக்கிறது. மீண்டும் பாரத பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதற்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து ராதிகா சரத்குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் சரத்குமார் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User