Prashanth: “GOAT கண்டிப்பா தளபதி படம் தான்.. அதனால தான் Ok சொன்னேன்..”: டாப் ஸ்டார் பிரசாந்த் ஓபன்!

விஜய்யின் கோட் படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கமிட்டானது பற்றி பிரசாந்த் மனம் திறந்து பேசியது வைரலாகி வருகிறது.

Apr 10, 2024 - 15:24
0 389
Prashanth: “GOAT கண்டிப்பா தளபதி படம் தான்.. அதனால தான் Ok சொன்னேன்..”: டாப் ஸ்டார் பிரசாந்த் ஓபன்!

சென்னை: 90களில் சாக்லெட் பாய் ஹீரோவாக வலம் வந்த பிரசாந்துக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான படங்கள் அமையவில்லை. கடைசியாக அவர் நடித்த அந்தகன் திரைப்படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்த நிலையில் விஜய்யின் கோட் படத்தில் பிரசாந்த் இணைந்தது ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது. லியோவை விடவும் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் மூவியாக கோட் உருவாகி வருகிறது. இதனால் கோலிவுட்டே இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.  

பொங்கல் ஸ்பெஷலாக கோட் படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. அதில், விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் கெத்து காட்டியிருந்தனர். இதன்மூலம் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் நால்வருமே ஒரே கேங் என்பது உறுதியானது. அதேபோல் பிரசாந்தின் கேரக்டர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்நிலையில், கோட் படத்தில் தனது கேரக்டர் பற்றியும், அதில் கமிட்டானது குறித்தும் பிரசாந்த் மனம் திறந்துள்ளார்.  

அதில், கோட் படத்தின் கதையை வெங்கட் பிரபு சொன்னதுமே எனக்குப் பிடித்திருந்தது. மல்டி ஸ்டார்ஸ் படமாக இருந்தாலும் கண்டிப்பாக இது தளபதி விஜய்யின் சம்பவம் தான். ஆனாலும் நான் உட்பட விஜய், பிரபுதேவா என அனைவருக்குமே நடிக்க நல்ல ஸ்பேஸ் உள்ளது. இதனால் கோட்டில் நடிக்க உடனே ஓகே சொல்லிவிட்டேன், அதேபோல் இந்தப் படம் பற்றி பேச இன்னும் நிறைய உள்ளன. அதையெல்லாம் படம் ரிலீஸாகும் போது சொல்கிறேன் என பிரசாந்த் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User