Raayan: தனுஷின் ராயன் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்... இதுதான் காரணமா..?

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

May 29, 2024 - 10:47
0 222
Raayan: தனுஷின் ராயன் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்... இதுதான் காரணமா..?

சென்னை: தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ளது ராயன். இந்தப் படத்தை தனுஷே இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ளார். தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், பிரகாஷ்ராஜ், செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இருந்து முதல் இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டது. அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட் கானா என இந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜூன் 13ம் தேதி வெளியாகவிருந்த ராயன் படத்தின் ரிலீஸ் தேதியில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் பெரிய பட்ஜெட் படங்கள் ஏதும் ரிலீஸாகவில்லை என்பதால், ராயனை களமிறக்க முடிவு செய்திருந்தார் தனுஷ். முன்னதாக இந்தியன் 2, தங்கலான் படங்கள் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியன் 2 ஜூலையில் ரிலீஸாகும் எனத் தெரிகிறது. அதேபோல், தனுஷின் ராயன் படத்துடன் மோத வேண்டாம் என தங்கலான் ரிலீஸை ஜூலைக்கு மாற்றியது படக்குழு. இதனிடையே பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோனே நடித்துள்ள கல்கி திரைப்படம் ஜூன் இறுதியில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படி அதிலும் மாற்றம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தனுஷின் ராயன் ஜூலை 26ம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28ம் தேதி என்பதால், அதனை முன்னிட்டு ராயன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாம். இதுபற்றி விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ராயன் படத்தின் பின்னணி இசையமைக்கும் வேலைகளில் பிஸியாகிவிட்டார் ஏஆர் ரஹ்மான். ஸ்டுடியோவில் ஏஆர் ரஹ்மான் பிஜிஎம் ஸ்கோர் செய்து கொண்டிருக்கும் போட்டோ டிவிட்டரில் வைரலாகி வந்தது.      

ஜூன் ரிலீஸில் இருந்து ராயன் பின்வாங்கிவிட்டதால், அதே தேதியில் விஜய் சேதுபதியின் மகாராஜா வெளியாகும் என சொல்லப்படுகிறது. ராயன் தனுஷுக்கு 50வது படம் என்றால், மகாராஜா விஜய் சேதுபதியின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சூது கவ்வும் 2, அஞ்சாமை, பேட் பாய்ஸ் மிஸன், மழை பிடிக்காத மனிதன் படங்களும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் ஜூலை இறுதியில் ரிலீஸாகும் ராயன் படத்துக்குப் போட்டியாக, சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User