Rajini: அபுதாபி Trip ஓவர்... அடுத்த Tour-க்கு ரெடியான ரஜினி... வெயிட்டிங்கில் கூலி டீம்!

அபுதாபியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, அடுத்து இன்னொரு டூர் செல்ல பிளான் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

May 28, 2024 - 18:04
0 270
Rajini: அபுதாபி Trip ஓவர்... அடுத்த Tour-க்கு ரெடியான ரஜினி... வெயிட்டிங்கில் கூலி டீம்!

சென்னை: ஜெயிலர் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். லால் சலாம் படத்தில் கேமியோவாக நடித்திருந்த ரஜினி, அடுத்து வேட்டையன் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. வேட்டையனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு துபாய், அபுதாபி சென்றிருந்த ரஜினிக்கு கோல்டன் விசா கொடுக்கப்பட்டது. மேலும், அபுதாபியில் உள்ள கோயிலுக்கும் சென்றுவிட்டு சென்னை திரும்பினார். இதனால் ஜூன் முதல் வாரத்திலேயே கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என செய்திகள் வெளியாகின. ஆனால், அதில் சில மாற்றங்கள் இருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.  

அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை செல்ல திட்டமிட்டுள்ளாராம். கொரோனாவுக்கு முன்பு வரை அடிக்கடி இமயமலை சென்று வருவது ரஜினியின் வழக்கம். ஆனால், கொரோனா காரணமாக சில ஆண்டுகள் இமயமலை பக்கம் செல்வதை தவிர்த்து வந்த ரஜினி, ஜெயிலர் ரிலீஸுக்குப் பின்னர் அங்கு சென்றிருந்தார். இதனையடுத்து தற்போது வேட்டையன் ஷூட்டிங் முடிந்துவிட்டதால், மீண்டும் இமயமலை செல்கிறாராம் சூப்பர் ஸ்டார். பத்ரினாத் தரிசனம், பாபாஜி குகையில் தியானம் என சில தினங்களுக்கு இமயமலையில் ரவுண்டு வர திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

அதன்பின்னரே கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது. கூலி படத்தின் ஸ்க்ரிப்ட் ஒர்க், ப்ரீ புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். ரஜினி ஓக்கே சொல்லிவிட்டால் உடனடியாக படப்பிடிப்பு ஆரம்பமாகிவிடும் எனக் கூறப்படுகிறது. கூலி படத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ள தகவலும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இருவருமே நண்பர்களாக நடிக்கவிருப்பதால், கூலி படத்தில் தரமான சம்பவங்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சத்யராஜ் தவிர கூலி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விவரங்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User