Raayan: ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி… சம்பவத்துக்கு தயாரான தனுஷ் ஃபேன்ஸ்!

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

May 06, 2024 - 18:29
0 344
Raayan: ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி… சம்பவத்துக்கு தயாரான தனுஷ் ஃபேன்ஸ்!

சென்னை: தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் ஜூன் மாதம் ரிலீஸாகிறது. பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் ராயன். இந்தப் படத்தை தனுஷ் இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வடசென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ளது ராயன்.

அதேநேரம் இந்தப் படத்தில் ஆக்‌ஷன் மட்டும் இல்லாமல் எமோஷனல், சென்டிமெண்ட் என பக்கா கமர்சியல் சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் மே 9ம் தேதி ரிலீஸாகிறது. தனுஷின் மிரட்டலான போஸ்டருடன் வெளியான ராயன் அப்டேட், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

ஃபர்ஸ்ட் சிங்கிளைத் தொடர்ந்து ராயன் டீசர், ரிலீஸ் தேதி போன்ற அப்டேட்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தப் படம் ஜூன் 13ம் தேதி ரிலீஸாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராயன் தவிர தனுஷின் குபேரா படத்தின் அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User