Premalu 2: மலையாளத்தில் ஹிட்டான பிரேமலு 2 கன்ஃபார்ம்… தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸான பிரேமலு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

Apr 20, 2024 - 13:36
0 279
Premalu 2: மலையாளத்தில் ஹிட்டான பிரேமலு 2 கன்ஃபார்ம்… தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

சென்னை: இந்தாண்டு ஆரம்பம் முதல் மலையாள சினிமாக்கள் அதிரடி காட்டி வருகின்றன. அப்படி விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மாஸ் காட்டிய படங்களில் ஒன்று பிரேமலு. நஸ்லென், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்த இந்தப்படத்தை கிரிஷ் இயக்கியிருந்தார். ஃபஹத் பாசில், திலீஸ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன் இணைந்து தயாரித்த பிரேமலு, கேரளாவை கடந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் அதிரி புதிரியாக ஹிட் அடித்தன.  

பிரேமலு ஏற்கனவே பார்த்து பழகிய படம் போல இருந்தாலும், 2கே கிட்ஸ்களின் காதல் கொண்டாட்டத்தை கலர்ஃபுல்லாக மாற்றி செம்மையாக கல்லா கட்டியது. பிரேமலு மலையாளம் வெர்ஷன் 100 கோடிக்கும் மேல் வசூலிக்க, தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டன. அதேபோல், கடந்த 12ம் தேதி முதல் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் பிரேமலு ஓடிடி ரசிகர்களையும் விட்டுவைக்கவில்லை. பிரேமலு படத்தில் ஹீரோ நஸ்லன் லண்டன் செல்வதாக க்ளைமேக்ஸ் அமைந்திருந்தது.  

இதோடு படம் முடிந்துவிட்டது என நினைத்த ரசிகர்களுக்கு பிரேமலு 2ம் பாகம் பற்றிய அப்டேட்டை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது படக்குழு. மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் பிரேமலு 2ம் பாகம் அடுத்தாண்டு ரிலீஸாகிறது. முக்கியமாக இந்தப் படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நேரடியாகவே ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரேமலு 2 தமிழ் வெர்ஷன் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழ்ப் படங்களைப் போல மலையாளத்திலும் வெற்றிப் பெற்ற படங்களின் 2ம் பாகம் உருவாகி வருகின்றன. கடந்தாண்டு செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி நடிப்பில் ஹிட்டான ரோமன்சம் படத்தின் 2ம் பாகமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியான பிரேமலு 2 அபிஸியல் அப்டேட் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User