John Cena: ஆஸ்கர் மேடையில் ஆடையின்றி வந்த ஜான் சீனா..? விழுந்து விழுந்து சிரித்த பார்பி நாயகி!

2024ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் WWF சாம்பியனும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா நிர்வாணமாக விழா மேடைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mar 11, 2024 - 13:30
0 279
John Cena: ஆஸ்கர் மேடையில் ஆடையின்றி வந்த ஜான் சீனா..? விழுந்து விழுந்து சிரித்த பார்பி நாயகி!

96வது ஆஸ்கர் விருது விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஹாலிவுட் உட்பட பல மொழிகளைச் சேர்ந்த திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் அதிகமாக 7 விருதுகளை வென்று மாஸ் காட்டியது. இந்நிலையில் ஆஸ்கர் விழாவில் WWF சாம்பியனும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா நிர்வாணமாக விழா மேடைக்கு வந்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

அதாவது புவர் திங்ஸ் திரைப்படத்துக்கு சிறந்த காஸ்ட்யூம் டிசைன் பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது. இதனை அறிவிக்க ஜான் சீனா மேடைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரோ ஆடை அணியாமல் நிர்வாணமாக மேடைக்கு வர, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். நல்ல வேளையாக தனது அந்தரங்க பகுதியை மட்டும் ஆஸ்கர் விருது அறிவிப்புக்காக கொடுக்கப்படும் கார்டு வைத்து மறைத்தபடி என்ட்ரி கொடுத்தார். 

காஸ்ட்யூம் டிசைன் பிரிவில் விருது கொடுக்க இப்படியா காஸ்ட்யூமே இல்லாமல் நிர்வாணமாக வருவார் ஜான் சீனா என நெட்டிசன்கள் கொதித்துவிட்டனர். ஆனால் இந்த விழாவில் பங்கேற்ற பார்பி பட ஹீரோயின் மார்கட் ராபி உள்ளிட்ட பிரபலங்கள் விழுந்து விழுந்து சிரிக்க, ஆஸ்கர் மேடை ஆபாச மேடை நாடகம் போல மாறியது. இந்நிலையில், ஜான் சீனா முழு நிர்வாணமாக வரவில்லை என்றும், அவர் ஸ்கின் கலரில் உள்ளாடை அணிந்திருந்ததாகவும் ஆஸ்கர் விருது அமைப்பினர் புதிய போட்டோ வெளியிட்டு சமாதான கொடியை பறக்கவிட்டுள்ளனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User