கிணற்றுக்குள் விழுந்த இருசக்கர வாகனம்... எடுக்க முயன்ற இருவர் உயிரிழப்பு...

கன்னியாகுமரி அருகே, கிணற்றுக்குள் விழுந்த இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்ற இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mar 11, 2024 - 13:46
0 164
கிணற்றுக்குள் விழுந்த இருசக்கர வாகனம்... எடுக்க முயன்ற இருவர் உயிரிழப்பு...

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே, லெட்சுமிபுரத்தை சேர்ந்த ஸ்ரீலிங்கம் என்பவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீலிங்கத்தின் மகன் தனது இருசக்கர வாகனத்தை வீட்டருகே உள்ள சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றின் அருகே வைத்துவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. சிறிது நேரத்திலேயே அவரது வாகனம் கிணற்றுக்குள் விழுந்தது. தொடர்ந்து வண்டியை கிணற்றில் இருந்து வெளியே எடுக்க, செல்வன் என்பவரும் ஸ்ரீலிங்கத்தின் மகனும் கயிறு கட்டி கிணற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இருசக்கர வாகனத்திலிருந்து பெட்ரோல் கசிவு ஏற்பட்ட நிலையில், மூச்சுத்திணறி இருவரும் நீருக்குள்ளேயே உயிரிழந்தனர். 

தகவலறிந்து சென்ற போலீசார், பொதுமக்களின் உதவியுடன் இருவரது சடலத்தையும் கிணற்றில் இருந்து மீட்டு, ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்று இரு இளைஞர்கள் கிணற்றில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User