கங்கைகொண்டானில் பிரம்மாண்ட தொழில் திட்டம்... ₹15,037 கோடி முதலீட்டை ஈர்த்த தமிழக அரசு!

விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Jul 09, 2026 - 10:12
0 260
கங்கைகொண்டானில் பிரம்மாண்ட தொழில் திட்டம்... ₹15,037 கோடி முதலீட்டை ஈர்த்த தமிழக அரசு!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் திருநெல்வேலி மாவட்டம் சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், விக்ரம் சோலார் குழுமம் தமிழ்நாட்டில் ஒரகடம் மற்றும் வல்லம் ஆகிய இரண்டு இடங்களில் சூரிய ஒளி மின்னழுத்த தொகுதி உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. மேலும் திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் சூரிய ஒளி மின்னழுத்த செல்கள் மற்றும் தொகுப்புகளுக்கான ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகத்தையும் நிறுவியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று திருநெல்வேலி மாவட்டம் சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழில் துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனர் தலைமைச் செயலாளர் முனைவர் மு, சாய்குமார் மற்றும அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User