நெருங்கும் மக்களவைத் தேர்தல்... கமலாலயத்தில் அண்ணாமலையுடன் ச.ம.க சரத்குமார், த.ம.மு.க ஜான் பாண்டியன் பேச்சுவார்த்தை...

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

Mar 11, 2024 - 13:25
0 193

2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ளது. எந்தெந்த கட்சி யார்யாருடன் கூட்டணி, எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்ற பரபரப்பான செய்திகள் தினம் தினம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

கடந்த புதன்கிழமை (6.3.2024) அன்று சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்ததாக சரத்குமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்குச் சென்று அண்ணாமலையுடன் சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து சரத்குமார் பாஜகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, தற்போது மாரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று கூறினார்.

மேலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும் பாஜக தலைமையகத்தில் அண்ணாமலையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User