சென்னையில் கனமழை.. தரையிறங்குவதில் சிக்கல்.. வானில் வட்டமடிக்கும் விமானங்கள்..!

சென்னை விமான நிலைய சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதல், விமானங்கள் தரையிறங்க முடியாமல் 8 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக காற்றின் வேகம் தரையின் ஈரப்பதத்தை பொறுத்து தரை இறக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Jun 10, 2025 - 12:33
Updated: 1 year ago
0 430
சென்னையில் கனமழை.. தரையிறங்குவதில் சிக்கல்.. வானில் வட்டமடிக்கும் விமானங்கள்..!
சென்னையில் கனமழை.. தரையிறங்குவதில் சிக்கல்.. வானில் வட்டமடிக்கும் விமானங்கள்..!

சென்னை விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தரையிறங்க முடியாமல் வானத்தில் எட்டு விமானங்கள் வட்டமடித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 

இந்த நிலையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யும் சூழல் உருவாகி சாரல் மழையானது பெய்து வருகிறது அதுமட்டுமின்றி காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, பாட்னாவில் இருந்து சென்னை , டெல்லியில் இருந்து சென்னை, பெங்களூரில் இருந்து சென்னை, கோயம்புத்தூரில் இருந்து சென்னை, இந்தூரில் இருந்து சென்னை,  ஹைதராபாத்தில் இருந்து சென்னை, கொல்கத்தாவில் இருந்து சென்னை என 8 இண்டிகோ பயணிகள் விமானம் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு விமானமும் சுமார் 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களுக்கு மேலாக வானில் வட்டம் அடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் திடீரென சாரல் மழை பெய்ததால் தரையிறங்கும் ஓடுதளத்தில் ஈரத்தன்மை மாறுபாடு அடைவதாலும் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

மேலும் விமானங்கள் தரையிறங்கும் பொழுது அதன் வேகத்தையும் உயரத்தையும் குறைக்கும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் தரையிறங்கும் விமானங்கள் மட்டும் தாமதம் ஆகிறது புறப்படும் விமானங்கள் தனது வேகத்தை அதிகரிக்கும் என்பதால் புறப்படும் விமானங்களில் எந்த தாமதமும் இன்றி பயணித்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

ஓடுபாதையின் தன்மை மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து விமானங்களும் தரையிறக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள்  தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User