Confident – அ இருங்க.. 5 வருஷமும் நாம தான்… முதல்வர் விஜய் உறுதி..!

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்றும்,  நம்பிக்கையோடு இருங்கள் என்றும் தோழமை கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.

Jul 01, 2026 - 16:14
0 325
Confident – அ இருங்க.. 5 வருஷமும் நாம தான்… முதல்வர் விஜய் உறுதி..!

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று(ஜூலை 01) மாலை நடைபெற்றது.

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.

இந்நிலையில், ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்கும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிப்பதற்கும் இந்த முக்கியக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான அரசியல் அணியாக செயல்படுவதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், "இந்த ஆட்சி இரண்டு மாதத்தில் கலையும், ஆறு மாதத்தில் கலையும் என்று சிலர் கூறி வருகின்றனர். அது ஒருபோதும் நடக்காது. தவெக அரசு முழுமையாக ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். அனைவரும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று உறுதிபட தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல\மைச்சர் விஜயின் இந்த கருத்து, தவெக ஆட்சியின் நிலைத்தன்மை குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User