சட்டசபை தேர்தலில் அதிக தொகுதி கேட்க முடிவு - CPM மாநில செயலாளர் சண்முகம் பேட்டி

2026 சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குமுதம் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Jun 10, 2025 - 12:13
Updated: 1 year ago
0 1.1
சட்டசபை தேர்தலில் அதிக தொகுதி கேட்க முடிவு - CPM மாநில செயலாளர் சண்முகம் பேட்டி
CPM மாநில செயலாளர் சண்முகம்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2026 சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப்போகிறது. அக் கட்சியின் தீர்மானங்கள், 2026 சட்டசபை தேர்தல் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியது கவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து, அவர் குமுதம் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, திமுக கூட்டணியில் 2026 சட்டசபை தேர்தலிலும் தொடர்கிறோம். இந்த முறை அதிக தொகுதிகளை கேட்க உள்ளோம். எண்ணிக்கை எத்தனை என்பதை முடிவு செய்யவில்லை. 2021 ஆம் ஆண்டு போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதலான தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். 

கூடுதலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களுக்கான குரல்களை ஒலிக்க வைப்பதற்கான வாய்ப்பு. எங்களுடைய மாநிலக் குழு கூடுதல் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 

நாங்கள் கேட்கும் தொகுதிகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். கிடைக்காவிட்டால் என்ற யூகத்தின் கேள்விக்கு வழிவகுக்க வைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். எங்கள் கூட்டணி வலிமை தான் முக்கியம், எங்கள் கூட்டணி வலிமையாக இருக்கிறது, கூட்டணியில் எங்கள் கட்சிக்கான மரியாதை, அங்கீகாரம் கிடைக்கிறது, எங்களுடைய கருத்துக்கு மரியாதை இருக்கிறது என்று கூறினார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சிகள் சொல்வது சரியில்லை. முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. பாஜக இந்த மாநாடு நடத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிட்டு உள்ளதாக சந்தேகம் உள்ளதாக தெரிவித்தா. மேலும் பேசிய அவர், ஆகம விதிகளை மீறி பாஜக உள்ளிட்ட அமைப்பினர் செயல்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை என்பது எதனை சொல்கிறார்கள்? மக்களுக்காக நாங்கள் போராட்டம் நடத்தி களத்தில் நிற்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User