தொடரும் மோசடி.. வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் ஏமாற்றிய நபர் கைது!

வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Jun 10, 2025 - 10:42
Updated: 1 year ago
0 328
தொடரும் மோசடி.. வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் ஏமாற்றிய நபர் கைது!
தொடரும் மோசடி.. வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் ஏமாற்றிய நபர் கைது!

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் மோசடி அதிகரித்து வருகிறது. இதனைக்கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஒரு நாளைக்கு ஒரு புகார் வந்த வண்ணம் தான் உள்ளது.

சைபர் கிரைம் மோசடி குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை தமிழக காவல்துறை அளித்து வருகிறது. சென்னை, மேற்கு மாம்பலம், பிள்ளையார் கோயில் தெருவில் பிரியங்கா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு பிரியாங்கவிற்கு அவரது தோழி மூலம் திரு.வி.க நகர் பகுதியைச்சேர்ந்த ரவிகுமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். பிரியங்கா புதிய தொழில் தொடங்க  முயற்சி செய்வதை அறிந்த ரவிகுமார் வங்கி மூலம் லோன் பெற்று தருவதாகவும், அதற்கு கொலட்ரால் பணமாக ரூ.27 லட்சம் செலுத்த வேண்டும் என்று பிரியங்காவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

இதனை நம்பிய பிரியங்கா பல தவணைகளாக ரூ.27 லட்சத்தை ரவிகுமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி ரவிகுமார் லோன் வாங்கி தராமலும், பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து பிரியங்கா திரு.வி.க நகர்  காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

திரு.வி.க நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாணை செய்து மேற்படி வழக்கில்  சம்பந்தப்பட்ட ரவிகுமாரை கைது  செய்தனர்.  கைது செய்யப்பட்ட ரவிக்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User