ஓடிடியில் வெளியானது "லால் சலாம்" எக்ஸ்டன்டட் வெர்ஷன் ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரசிகர்களுக்காகப்  பிரத்தியேகமாகக் கொண்டுவந்துள்ள, லால் சலாம் படத்தின், புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் பதிப்பில், திரையில் வராத கதையுடன், இன்னும் ஆழமான உணர்வுகளுடன்,  லால் சலாம் திரைப்படம்,  இப்போது SunNXT ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

Jun 10, 2025 - 13:20
0 394
ஓடிடியில் வெளியானது "லால் சலாம்" எக்ஸ்டன்டட் வெர்ஷன் ..!
ஓடிடியில் வெளியானது "லால் சலாம்" எக்ஸ்டன்டட் வெர்ஷன் ..!
கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'லால் சலாம்' திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.  இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இதில், சிறப்பு தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விக்னேஷ் , லிவிங்ஸ்டன், செந்தில் , ஜீவிதா , கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் துணை நடிகர்களாக நடித்தனர்.
லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  ஓராண்டுக்கு மேலாக படம் ஓடிடியில் வெளியாகத நிலையில்,  நட்பு, துரோகம், இழப்பு  மற்றும் புரிதலுக்கான போராட்டங்களைத் தழுவிய ஒரு உணர்ச்சிப்பூர்வமான பயணத்துடன் உருவான லால் சலாம் திரைப்படம் திகழ்கிறது.

ஒரே கிரிக்கெட் அணியில் சிறுவயதில் விளையாடிய இரு நண்பர்கள், மதம், அரசியல் மற்றும் தவறான புரிதலால் பிரிந்துவிடுகின்றனர். அவர்களுக்குள் நிகழும் போராட்டம் தான் இந்தப்படத்தின் மையம். மதமும் அரசியலும் நட்பைப் பிரித்தாலும் ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டிராத புதிய பதிப்பு,  ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக இப்போது ஒளிபரப்பாகிறது.  இந்த புதிய பதிப்பில்,  நம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அட்டகாசமான ஸ்வாக், கிரிக்கெட் பின்னணி,  விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தின் அட்டகாசமான நடிப்பு ஆகியவற்றுடன், திரையில் கண்டிராத பல காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். 

ரஜினிகாந்த் மற்றும் ரஹ்மான் எனும் மறக்க முடியாத கூட்டணி இப்படத்திலும் அசத்தியுள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு புது வடிவம் தந்துள்ளது. வெறும் திரைப்படமாக இல்லாமல், லால் சலாம் மனித உணர்வுகளுக்கு வலிமை கொடுக்கும் ஒரு அழகான பயணமாக அமைந்துள்ளது. தற்போது, எக்ஸ்டன்டட் வெர்ஷனுடன் வெளியான "லால் சலாம்" திரைப்படத்தினை உங்கள் SunNXT  ஓடிடி தளத்தில் கண்டு மகிழுங்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User