காஞ்சிபுரம்: பேருந்துகள் மோதல் - 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Jan 08, 2024 - 14:05
Updated: 3 years ago
0 157
காஞ்சிபுரம்: பேருந்துகள் மோதல் - 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காஞ்சிபுரம் அருகே கருக்குப்பேட்டை பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்திலிருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு வாலாஜாபாத் நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பேருந்தும் வாலாஜாபாத்- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த கருக்குப்பேட்டை பகுதியில் அதிவேகமாக வந்த தனியார் பயணிகள் பேருந்து, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அரசு பேருந்தின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் இரு பேருந்திலும் பயணம் செய்த பயணிகள் என 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு  உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ்விபத்து குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User