லட்டு பரிதாபங்களை நீக்கிட்டா போதுமா? – தமிழிசை கேள்வி!

திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து யூடியுப்பில் பரிதாபங்கள் வீடியோ வெளியாகி, டீலிட் செய்யப்பட்டது குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 

Sep 27, 2024 - 17:59
0 642
லட்டு பரிதாபங்களை நீக்கிட்டா போதுமா? – தமிழிசை கேள்வி!

சி.பா ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் அவரது திருவுருவ படத்துக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”ஆந்திராவில் லட்டு விவகாரம் குறித்த கேள்விக்கு, லட்டு விவகாரம் நம் அனைவர் மனதையும் புண்படுத்தும்படி இருக்கும் போது அதை கொச்சைப்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டது தவறு என்பதை சுட்டிக் காட்டதான் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் நீக்கி விட்டாலும் கூட புண்பட்ட மனதை சார்ந்தவர்கள் நிச்சயமாக அதற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொடுத்ததாகவும் கூறினார்.

என்னை பொறுத்தவரை பவண் கல்யானாக இருக்கட்டும், ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கட்டும், உணர்வு பூர்வமாக ஒரு தவறு நடந்தது என்றால் இந்தத் தவறை சுட்டிக்காட்டுவதற்கு அவர்கள் கடுமையான முயற்சி மேற்கொள்கிறார்கள். ஒரு நம்பிக்கையை யாரும் அவமரியாதை செய்யக்கூடாது என்பதுதான்” என்றார். 

மேலும், “பிரகாஷ் ராஜ் போன்றவர்கள், மாநில பிரச்னையை பெரிதாக்குவதாக சொல்கிறார்கள். திருப்பதி தேவஸ்தானத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் இருக்கிறார்கள். அமெரிக்கா, கனடாவில் இருப்பவர்கள் இங்கிருக்கும் லட்டுக்கு காத்திருக்கிறார்கள். இது உலகம் முழுவதும் இருக்கும் பிரச்சினை. அந்த நம்பிக்கை உடையவர்களின் பிரச்னை. இதை மாநில பிரச்னையாக சுருக்கி விட முடியாது.

தமிழகத்தில் இந்த நம்பிக்கை உடையவர்களை இடர்வதும் சரியானதல்ல. தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்வதில்லை. ஆனால் ஆந்திராவில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள். தனக்கு வாக்களித்தவர்களில்  பெரும்பாலானவர்கள் அந்த நம்பிக்கை சார்ந்தவர்களாக இருந்தால் மதிப்பளிக்க வேண்டியது ஆட்சியாளர்கள் கடமை. மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்கிறேன் என்பதற்காகத்தான் பவன் கல்யாண் போன்றவர்கள் விரதமிருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த உணர்வும் எதுவும் பிரச்னை இல்லை” என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User