சேலத்தில் அனலைக் கக்கிய சூரியன்.. இந்தியாவிலேயே டாப் 3.. 108.14°பாரன்ஹீட்.. வாட்டும் வெப்ப அலை

நேற்றைய தினம் இந்தியாவில் மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை சேலத்தில் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் சேலத்தில் 108.14°F வெப்பமானது பதிவாகி இருந்ததால் மக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Apr 24, 2024 - 14:51
0 671
சேலத்தில் அனலைக் கக்கிய சூரியன்.. இந்தியாவிலேயே டாப் 3.. 108.14°பாரன்ஹீட்.. வாட்டும் வெப்ப அலை

தமிழ்நாட்டில் தார்சாலையில் முட்டையை உடைத்து ஆம்லேட் போடும் அளவிற்கு சூரியனின் கதிர்வீச்சு சுட்டெரித்து வருகிறது. நேற்றைய தினம் 
வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தென் தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் மழை பெய்துள்ளது. 

இந்தியாவில் நேற்று அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 110.3°F மற்றும் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையானது ஒடிசா மாநிலம் பரலகேமுண்டியில் 109.04°F வெப்பமானது பதிவாகி உள்ளது. சேலத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீசியது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகபட்ச   வெப்பநிலை  தமிழக  உள்  மாவட்டங்களின்  ஒருசில  இடங்களில்  இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு சோத்துப்பாறை (தேனி) 5 செமீ,  தக்கலை (கன்னியாகுமரி) 3 செமீ சிவலோகம் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது.   வட தமிழக உள்  மாவட்டங்களில்  ஓரிரு  இடங்களில்  4° – 5° செல்சியஸ் இயல்பை விட  அதிகமாக இருந்தது. 

கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீசியது. அதிகபட்ச வெப்பநிலை 9  இடங்களில்   40-42° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை  சேலத்தில் 42.3° செல்சியஸ், ஈரோட்டில் 42.0° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.6° செல்சியஸ், கரூர் பரமத்தி &  வேலூரில் 41.5° செல்சியஸ், தர்மபுரி & மதுரையில் (நகரம்)   41.0° செல்சியஸ், நாமக்கல்லில் 40.5° செல்சியஸ் மற்றும் திருச்சியில் 40.1° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 39° செல்சியஸ்    பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 38° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 21° –28°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  சென்னை மீனம்பாக்கத்தில் 38.3° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.1° செல்சியஸ்   பதிவாகியுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்றைய தினம் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளைய தினம் தென் தமிழகத்தில்  ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  வட தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரைக்கும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்றும் நாளைய தினமும் அதிகபட்ச   வெப்பநிலை  வட தமிழக  உள்  மாவட்டங்களின்  ஒருசில  இடங்களில்  இயல்பை விட 3° – 5° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–42° செல்சியஸ். இதர  தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

26.04.2024 முதல் 28.04.2024 வரை அதிகபட்ச   வெப்பநிலை  தமிழக  உள்  மாவட்டங்களின்  ஒருசில  இடங்களில்  இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38°–41° செல்சியஸ், இதர  தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: 24.04.2024 முதல் 28.04.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85% ஆகவும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: 24.04.2024 & 25.04.2024 வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User