Akshay Kumar: கண்ணப்ப நாயனார் கதையில் அக்ஷய்குமார்… விஷ்ணு மஞ்சு நடிப்பில் பான் இந்தியா பிரம்மாண்டம்

பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமார் முதன்முறையாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

Apr 16, 2024 - 17:33
0 249
Akshay Kumar: கண்ணப்ப நாயனார் கதையில் அக்ஷய்குமார்… விஷ்ணு மஞ்சு நடிப்பில் பான் இந்தியா பிரம்மாண்டம்

சென்னை: தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு, கண்ணப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். தீவிர சிவ பக்தரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை வரலாறே கண்ணப்பா கதை, மிகப் பெரிய பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். லேட்டஸ்டாக கண்ணப்பா திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் இணைந்துள்ளார்.   

கண்ணப்பா மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் அக்‌ஷய் குமார். அக்‌ஷய் குமாரின் கதாபாத்திரம் கண்ணப்பாவின் கதைக்கு மிக முக்கியமானதாக இருப்பதால், அவருடைய தோற்றம், நடிப்பு பார்வையாளர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் குறிப்பிடத்தக்க பகுதி உள்ளிட்ட முக்கியமான காட்சிகளை ஐதராபாத்தில் படமாக்குவதில் கவனம் செலுத்தி வரும் படக்குழுவுடன் அக்‌ஷய் குமார் இணைந்துள்ளார். அவர் சிவனாக நடிக்கிறாரா அல்லது வேறு கேரக்டரா என படக்குழு சொல்லவில்லை.  

இதுகுறித்து விஷ்ணு மஞ்சு கூறுகையில், ”அக்‌ஷய்யுடன் படப்பிடிப்பில் இருப்பது த்ரில்லாக இருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஒன்றை படமாக்க தயாராக இருக்கிறோம். திறமையான நடிகர் எங்களுடன் இணைந்திருப்பது மிகப்பெரிய கவுரவம். அக்‌ஷய் குமாரின் வருகை கண்ணப்பா படத்தை பான் இந்தியா அளவில் கொண்டும் செல்லும்” என்றார். முகேஷ் குமார் சிங் இயக்கும் இந்தப் படம் கண்ணப்ப நாயனார் வரலாற்றுடன் தொடர்புடைய ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர கோயிலில் தொடங்கப்பட்டதோடு, அதன் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User