Ajith: அஜித்துக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் கொடுத்த ஷாலினி… அடேங்கப்பா தரமான கிஃப்ட் தான்!

கோலிவுட்டின் அல்டிமேட் ஸ்டார் அஜித் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு தரமான கிஃப்ட் கொடுத்து அசத்தியுள்ளார் அஜித்தின் காதல் மனைவி ஷாலினி.

May 01, 2024 - 11:07
0 364
Ajith: அஜித்துக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் கொடுத்த ஷாலினி… அடேங்கப்பா தரமான கிஃப்ட் தான்!

சென்னை: காதல் மன்னன், ஆசை நாயகன் இப்படி ரசிகர்களால கொண்டாடப்பட்ட அஜித், இப்போ மாஸ் ஹீரோவா மஜா பண்ணிட்டு இருக்கார். இன்னைக்கு அவரோட 53வது பிறந்தநாள ரசிகர்கள் தாறுமாறா கொண்டாடிட்டு இருக்காங்க. அவங்க மட்டும் இல்லாம சினிமா பிரபலங்களும் அஜித்துக்கு பர்த்டே விஷ் பண்ண மறக்கல. இதோட நெக்ஸ்ட் லெவலா விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களோட அப்டேட்ஸ் வரும்ன்னும் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துட்டு இருக்காங்க.   

இந்த டைம்ல யாருமே எதிர்பார்க்காத ஒரு போட்டோ சோஷியல் மீடியாவையே அதிர வச்சிருக்கு. இது அஜித்தோட சினிமா அப்டேட்ன்னு நினைச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்லங்க. ஆனா அதவிட செம்மையா வைப் கொடுத்துருக்கு இந்த போட்டோ. சினிமால என்ட்ரியானதுல இருந்தே இன்னொரு பக்கம் பைக், கார் ரேஸ்ல கலந்துகிட்டு வர்றார் அஜித். அதுலயும் இப்ப கொஞ்ச நாளாவே பைக் டூர் போறதுல அஜித் காட்டுற இன்ட்ரஸ்ட் ரொம்பவே அதிகம்.  

தனியாவோ இல்ல தனக்குன்னு ஒரு குரூப் சேர்த்தோ நினைச்ச இடத்துக்கெல்லாம் பைக்ல ட்ரிப் போய்ட்டு வர்றார். சொல்லப்போனா அஜித்தோட முதல் காதல் பைக்-ஆ தான் இருக்கும். அதுக்கு அப்புறம் தான் ஷாலினின்னு சொல்லலாம். இதெல்லாம் ஷாலினிக்கு தெரியாதா என்ன..? அதனால தான் அஜித்தோட பிறந்தநாளுக்கு செம்ம ஒர்த்தான கிஃப்ட் கொடுத்து அமர்க்களப்படுத்திருக்காங்க ஷாலினி. அதாவது அஜித்துக்கு பல லட்சம் மதிப்புள்ள டுகாட்டி பைக் கிஃப்ட்டா கொடுத்துருக்காங்க.

 

ஆல்ரெடி அஜித் ஏராளமான பைக்ஸ் வச்சிருக்கார், அதெல்லாமே பல லட்சங்கள் மதிப்புடையதுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சது தான். அந்த லிஸ்ட்ல இப்ப டுகாட்டியும் இணைஞ்சிருக்கு. அஜித் முன்னணி ஹீரோவா வளர்ந்து வந்த நேரம், அவருக்கு பல ஹீரோயின்கள் Propose பண்ணதா கோலிவுட்ல ஒரு டாக் உண்டு. ஆனாலும் யாருக்கும் அசராத அஜித், அமர்க்களம் மூவில நடிச்சப்போ ஷாலினிகிட்ட சரண்டர் ஆனார். அமர்க்களம் படத்துல Rugged Boy-ஆ கெத்து காட்டினாலும், Behind the Scene-ல ஷாலினி கூட கண்ணாலயே காதல் பேசிருக்கார் அஜித். அதுக்கெல்லாம் சேர்த்து இப்ப அஜித்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்துட்டே இருக்காங்க ஷாலினி. அதுல இந்த டுகாட்டி பைக் ரொம்பவே ஸ்பெஷல்ன்னு ரசிகர்களும் கமெண்ட்ஸ் பண்ணிட்டு வர்றாங்க.   

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User