Ajith: வாக்குச் சாவடியில் சூழ்ந்த ரசிகர்கள்… முதல் ஆளாக காத்திருந்து ஓட்டுப் போட்ட அஜித்!

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து முதல் ஆளாக வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட்டார் அஜித்குமார்.

Apr 19, 2024 - 08:15
0 286
Ajith: வாக்குச் சாவடியில் சூழ்ந்த ரசிகர்கள்… முதல் ஆளாக காத்திருந்து ஓட்டுப் போட்ட அஜித்!

சென்னை: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ளதால் பைக் ட்ரிப் செல்வதில் பிஸியாக இருந்தார் அஜித். இந்நிலையில், இன்று  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள அஜித், முதல் ஆளாக வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட்டார். வழக்கம் போல ரொம்பவே சிம்பிளாக வாக்குச் சாவடிக்குச் சென்ற அஜித்தை, அவரது ரசிகர்கள் சூழ்ந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

7 மணிக்குத் தான் வாக்குப் பதிவு தொடங்கும் என்றாலும், சுமார் அரை மணி நேரத்துக்கு முன்பாகவே அஜித் வாக்குச் சாவடிக்குச் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து வாக்குச் செலுத்துவதற்கான நடைமுறைகளை முடித்துவிட்டு சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தார். அதன் பின்னர் 7 மணி ஆனதும் முதல் ஆளாக வாக்களித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் ஒயிட் ஷர்ட், சன் க்ளாஸ் அணிந்து செம்ம ஸ்மார்ட்டாக வாக்குச் சாவடிக்கு வந்து சென்றார் அஜித்.  

அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் விரும்புகின்றனர். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத அஜித், அரசியல் பற்றி பேசுவதையும் தவிர்த்து வருகிறார். ஆனாலும், ஒவ்வொரு தேர்தலிலும் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் அஜித் கில்லி என்பது மறுக்க முடியாத உண்மை.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User